Home One Line P1 “மலேசியா மலேசியர்களின் சொத்து!”- அன்வார் இப்ராகிம்

“மலேசியா மலேசியர்களின் சொத்து!”- அன்வார் இப்ராகிம்

721
0
SHARE
Ad

கோலாலம்பூர்: மத்திய அரசியலமைப்பால் உத்தரவாதம் அளிக்கப்பட்ட சலுகைகள் குறித்து மலாய்க்காரர்கள் கவலையடைவதற்கு எந்த காரணமும் இல்லை என்று பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராகிம் கூறினார்.

நாட்டில் உள்ள இனவெறி சமூகத்திற்கு அதிக கவனம் செலுத்துகிறார்கள் என்ற தொழில் முனைவோர் மேம்பாட்டு அமைச்சர் முகமட் ரெட்ஜுவான் யூசோப் கூறியதற்கு பதிலளிக்கும் விதமாக அவர் இதனைக் கூறினார்.

“குறுகிய மனநிலை மற்றும் இன உணர்வைக் குறிக்கும் எண்ணங்கள் நிச்சயமாக புத்திசாலித்தனமானவை அல்ல. ஒருபோதும், சீனர்கள் அல்லது இந்தியர்களால் இந்த அரசியலமைப்பு எதிர்க்கப்படபோவதில்லைஎன்று அன்வார் கூறினார்.

#TamilSchoolmychoice

எனவே, மலேசியர்கள் ஒன்றிணைந்து முன்னேறுமாறு அவர் அழைப்பு விடுத்தார்.

குறைந்த இன பாகுபாடு நாட்டிற்கு சிறந்தது,” என்று அவர் கூறினார்.

இதற்கிடையில், மலேசியா மலாய்க்காரருக்கு சொந்தமானது என்ற பெர்லிஸ் முஃப்தி முகமட் அஸ்ரி சைனுல் அபிடினின் சமீபத்திய அறிக்கையையும் தாம் ஏற்கவில்லை என்று அன்வர் கூறினார்.

அவரது கருத்துக்கள் குறித்து நான் கருத்து தெரிவிக்க விரும்பவில்லை, ஆனால் மலேசியா மலேசியர்களின் சொத்து” என்று அவர் குறிப்பிட்டார்.