
கோலாலம்பூர்: 1எம்டிபியின் முன்னாள் தலைமை நிருவாக அதிகாரியான அருள் கந்தசாமியின் இரண்டு வங்கிக் கணக்குகள் விடுவிக்கப்பட்டன. அவற்றை விடுவிப்பதற்கான சட்டப்பூர்வ முயற்சியை தாக்கல் செய்த ஒரு நாள் கழித்து, அவரது இரண்டு வங்கிக் கணக்குகளை எம்ஏசிசி விடுவித்தது.
இன்று புதன்கிழமை காலை கோலாலம்பூர் உயர்நீதிமன்ற நீதிபதி முகமட் ஜெய்னி மஸ்லான் முன் நீதிமன்ற நடவடிக்கைகளின் போது விண்ணப்பதாரரின் வழக்கறிஞர் என்.சிவானந்தன் இதை வெளிப்படுத்தினார்.
தமது இரண்டு மேபேங்க் வங்கிக் கணக்குகளை விடுவிப்பதற்கு எம்ஏசிசிக்கு விண்ணப்பித்திருந்த அருள் கந்தாவின் விண்ணப்பத்தை விசாரிக்க நீதிமன்றம் இன்று திட்டமிடப்பட்டது.
கடந்த ஆண்டு ஜூலை 12-ஆம் தேதி பணமோசடி விசாரணையின் ஒரு பகுதியாக முடக்கப்பட்ட எட்டு வங்கிக் கணக்குகளில் இவை அடங்கும்.
இருப்பினும், மற்ற ஆறு கணக்குகள் இன்னும் முடக்கப்பட்டுள்ளன.
அருள் காந்தா மற்றும் முன்னாள் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் ஆகியோர் 1எம்டிபியின் இறுதி தணிக்கை அறிக்கையை மாற்றி அமைத்ததற்காக குற்றம் சாட்டப்பட்டுள்ளனர். மேலும், இந்த வழக்கின் விசாரணை நவம்பர் 18-ஆம் தேதியன்று திட்டமிடப்பட்டுள்ளது.