Home One Line P1 முகமட் அடிப் மரண விசாரணை முடிவு செப்டம்பர் 27 அறிவிக்கப்படும்!

முகமட் அடிப் மரண விசாரணை முடிவு செப்டம்பர் 27 அறிவிக்கப்படும்!

1106
0
SHARE
Ad

கோலாலம்பூர்: தீயணைப்பு வீரர் முகமட் அடிப் முகமட் காசிம் மரணம் தொடர்பான விசாரணை முடிவினை வருகிற செப்டம்பர் 27-ஆம் தேதி, ஷா அலாம் அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கவுள்ளதாக இன்று புதன்கிழமை தெரிவித்துள்ளது.

பிப்ரவரி 11-ஆம் தேதி முதல் ஐந்து மாதக் காலமாக இந்த விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது. சுமார் 30 சாட்சிகள் இந்த வழக்கு விசாரணை தொடர்பாக தங்களின் நிலைப்பாட்டை எடுத்துரைத்துள்ளனர்.

24 வயதான அடிப் கடந்த ஆண்டு டிசம்பர் 17-ஆம் தேதி சீ பீல்ட் மகா மாரியம்மன் கோயிலுக்கு வெளியே நடந்த கலவரத்தின் போது ஏற்பட்ட காயங்களினால் பலியானார்.