கோலாலம்பூர்: அரேபிய வனப்பெழுத்து கல்வியை புறக்கணித்து தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப வேண்டாம் என்று கருத்து வெளியிட்ட செகாட் எனும் அமைப்பை இளைஞர் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் சைட் சாதிக், அவர்களின் செயல் அறிவிலித்தனமானது என்று தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அரேபிய வனப்பெழுத்து பாடமானது தற்போது, தேர்வுப் பாடமாகவும், தேர்வில் சேர்க்கப்படாதையும் அவர் குறிப்பிட்டுக் கூறினார்.
முன்னதாக, செகாட் எனும் ஒரு குழு, சீனம் மற்றும் தமிழ்ப்பள்ளிகளில் அரேபிய வனப்பெழுத்தை அறிமுகப்படுத்தும் திட்டம் குறித்து அரசாங்கம் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று கோரியது.
அவ்வாறு செய்யத் தவறினால், எதிர்ப்பின் அடையாளமாக தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவதை நிறுத்தும்படி பெற்றோர்களை ஊக்குவிப்பர் என்று அவ்வமைப்புக் கூறியிருந்தது.