Home One Line P1 ப.சிதம்பரத்தின் முன்ஜாமின் மனு தள்ளுபடி, மேலும் சில நாட்கள் கைது செய்து விசாரிக்க சிபிஐ உத்தேசம்!

ப.சிதம்பரத்தின் முன்ஜாமின் மனு தள்ளுபடி, மேலும் சில நாட்கள் கைது செய்து விசாரிக்க சிபிஐ உத்தேசம்!

774
0
SHARE
Ad

புது டில்லி: ஐஎன்எக்ஸ் மீடியா ஊழல் வழக்கில் கடந்த புதன்கிழமையன்று கைது செய்யப்பட்ட முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம், விடுவிக்கப்படுவாரா இல்லையா என்பதை இன்று திங்கட்கிழமை உச்ச நீதிமன்றம் முடிவு செய்ய இருந்தது

இதற்காக சிதம்பரம் இரண்டு மனுக்களை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தார். அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ தன்னை கைது செய்யப்படுவதிலிருந்து பாதுகாக்க அவர் முன்ஜாமீன் கோரி தாக்கல் செய்திருந்தார்.

இதனையடுத்து, மூன்றாவது, தனக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட கைது ஆணையை எதிர்த்தும், தன்னை காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐக்கு அளிக்கப்பட்ட அனுமதியை எதிர்த்தும் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். எனினும், இந்த மூன்றாவது மனு இன்று உச்சநீதிமன்றம் விசாரிக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டது.

#TamilSchoolmychoice

இந்நிலையில், அவரது முன்ஜாமீன் மனு மீதான விசாரணையில், கைதுக்கு முன் தொடரப்பட்ட முன்ஜாமீன் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. சிபிஐ கைது செய்து விட்டதால் முன்ஜாமீன் மனு காலாவதியாகிவிட்டது என்று கூறி, மேலும் ஐஎன்எக்ஸ் வழக்கில் ஜாமீன் கோரி ப.சிதம்பரம் கீழமை நீதிமன்றத்தை அணுகலாம் என்று உச்சநீதிமன்றம அறிவுறுத்தியுள்ளது

முன்னதாக, ஐஎன்எக்ஸ் மீடியா ஊழல் வழக்கில் ப.சிதம்பரத்தை ஐந்து நாள் சிபிஐ காவலில் விசாரிக்க டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த ஐந்து நாள் காவல் இன்றுடன் நிறைவடைவதால், ப.சிதம்பரத்தை மேலும் சில நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி கோர உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.