Home One Line P1 சிதம்பரத்திற்கான தடுப்புக் காவல் ஆகஸ்ட் 30 வரை நீட்டிப்பு

சிதம்பரத்திற்கான தடுப்புக் காவல் ஆகஸ்ட் 30 வரை நீட்டிப்பு

799
0
SHARE
Ad

புதுடில்லி – கடந்த 5 நாட்களாக சிபிஐ எனப்படும் மத்திய புலனாய்வுத் துறை, தடுப்புக் காவலில் வைத்து முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரத்தை விசாரித்து வரும் நிலையில், அவர் விசாரணையில் முறையான ஒத்துழைப்பு வழங்கவில்லை என்பதால் மேலும் 5 நாட்களுக்கு அவரைத் தடுப்புக் காவலில் வைத்து விசாரிக்க மத்திய புலனாய்வுத் துறை இன்று நீதிமன்றத்தில் கோரிக்கை வைத்தது.

சிதம்பரத்திற்கு வழங்கப்பட்டிருந்த 5 நாட்கள் தடுப்புக் காவல் இன்றுடன் முடிவடைந்ததால் காவல் நீட்டிப்புக்கு மத்திய புலனாய்வுத் துறை விண்ணப்பித்தது.

அதைத் தொடர்ந்து, வழக்கை விசாரித்த புதுடில்லி சிபிஐ நீதிமன்றம் மத்திய புலனாய்வுத் துறையின் கோரிக்கையை ஏற்று ஆகஸ்ட் 30 வரை சிதம்பரத்தை விசாரிக்க அனுமதி வழங்கியிருக்கிறது.

#TamilSchoolmychoice

வழக்கிற்கு இடையில் சிதம்பரம் தனது மகன் கார்த்தி சிதம்பரம், மனைவி நளினி சிதம்பரம் ஆகியோரைச் சந்தித்து உரையாடினார்.