Home One Line P1 ஜாகிர் நாயக் மீது காவல் துறையில் புகார் அளிக்க இராமசாமி உத்தேசம்!

ஜாகிர் நாயக் மீது காவல் துறையில் புகார் அளிக்க இராமசாமி உத்தேசம்!

776
0
SHARE
Ad

கோலாலம்பூர்: பினாங்கு துணை முதல்வர் பி.இராமசாமி மற்றும் சர்ச்சைக்குரிய இஸ்லாமிய மத போதகர் ஜாகிர் நாயக்கிற்கு இடையிலான கருத்து விவாதங்கள் அதிகரித்து வரும் வேளையில், ஜாகிர் நாயக் மீது காவல் துறையில் தாம் புகார் அறிக்கை ஒன்றினை அளிக்க இருப்பதாக பேராசிரியர் பி.இராமசாமி தெரிவித்துள்ளார்.

இன்று திங்கட்கிழமை வெளியிட்ட ஒரு பதிவில், உள்ளூர் அரசியலில் தலையிட்டதாகக் கூறி ஜாகிர் நாயக்கிற்கு எதிராக காவல் துறையில் புகார் அளிக்க உள்ளதாக அவர் கூறினார்.

கடந்த ஆகஸ்டு 23-ஆம் தேதியிட்ட ஜாகிரின் இரண்டாவது கோரிக்கை அறிவிப்புக்கு இராமசாமி பதிலளித்தார். அந்தக் கடிதத்தில் ஜசெகவில் தம் நிலைப்பாட்டினை உறுதி செய்வதற்காக தாம் இவ்வாறு செய்வதாக ஜாகிர் குறிப்பிட்டிருந்ததை அவர் சுட்டிக் காட்டினார்.

#TamilSchoolmychoice

“மேலும்,  துணை முதலமைச்சர் என்ற எனது பதவியை தவறாகப் பயன்படுத்தியதாகவும், கடந்த ஆகஸ்டு 24-ஆம் தேதி அன்று பிரிக்பீல்ட்ஸில் அவருக்கு எதிராக நடத்தப்பட இருந்த போராட்டத்தின் பின்னணியில் இருப்பவர் நான்தான் என்றும் அவர் குற்றம் சாட்டினார். இந்த இரண்டாவது சட்ட அறிவிப்பு உள்ளூர் அரசியலில் ஜாகிரின் மற்றொரு குறுக்கீடு அல்லவா? இது அவருக்கு எதிராக காவல் துறை எச்சரித்த ஒன்று, ”என்று இராமசாமி மேலும் கூறினார்.

இது தவிர, ஜாகிரைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அக்பெர்டின் & கோ என்ற சட்ட நிறுவனத்திற்கு எதிராக மலேசிய நீதிமன்ற கழகத்திற்கு புகார் கடிதத்தையும் எழுதுவதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்நிறுவனம் நெறிமுறையற்ற மற்றும் தொழில்சார்ந்த நடத்தையின் படி நடந்து கொள்ளவில்லை என்றும் அவர் குற்றம் சாட்டினார்.