Home One Line P1 அம்னோ- பாஸ் கூட்டணியில், இக்காத்தான், பெர்ஜாசா கட்சிகள் இணைந்தன!

அம்னோ- பாஸ் கூட்டணியில், இக்காத்தான், பெர்ஜாசா கட்சிகள் இணைந்தன!

751
0
SHARE
Ad

கோலாலம்பூர்: பார்டி இக்காத்தான் மலேசியா (இக்காத்தான்) மற்றும் பெர்ஜாசா கட்சியும் இன்று திங்கட்கிழமை பாஸ் மற்றும் அம்னோவுடன் அரசியல் கூட்டணியில் சேர ஒப்புக்கொண்டதாக பாஸ் கட்சியின் தலைவர் அப்துல் ஹாடி அவாங் தெரிவித்தார்.

இக்காத்தான் கட்சித் தலைவர் அப்துல் காடிர் ஷேக் பாட்சிர் மற்றும் பெர்ஜாசா கட்சியின் துணைத் தலைவர் முகமட் ஹாசிஸி அப்துல் ரஹ்மான் ஆகியோர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

முன்னதாக, அம்னோ மற்றும் பாஸ் சம்பந்தப்பட்ட கூட்டணியில் சேர இக்காத்தான் இன்னும் முடிவு செய்யவில்லை என்று அப்துக் காடிர் கூறியிருந்தார்.

#TamilSchoolmychoice

நாட்டில் பல்லின சமூகத்திற்கான கூட்டணியின் போராட்டத்தை பாஸ் ஏற்றுக் கொண்டதால்  இந்த முடிவு எடுக்கப்பட்டதாக முன்னாள் அம்னோ மூத்த அமைச்சருமான அவர் கூறினார்.

இதற்கிடையில், அம்னோ மற்றும் பாஸ் ஒத்துழைப்பில் இக்காத்தான் அதிருப்தி அடைவதாகக் கூறுவதை ஹாடி அவாங் நிராகரித்தார்.