Home One Line P1 மகாதீர் பிரதமர் பதவியை விட்டுக் கொடுக்கும் நேரம் வந்துவிட்டது!

மகாதீர் பிரதமர் பதவியை விட்டுக் கொடுக்கும் நேரம் வந்துவிட்டது!

1097
0
SHARE
Ad

கோலாலம்பூர்: இன்று செவ்வாய்க்கிழமை பிகேஆர் கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிமுடனான சந்திப்பு நல்ல பலனை அளிக்கும் என்று நம்புவதாக ஷங்கர் கணேஷ் தெரிவித்துள்ளார்.

சுமார் எட்டு கோரிக்கைகளை அவர்கள் முன்வைத்ததாகவும், அவ்வனைத்து கோரிக்கைகளையும் அன்வார் ஏற்றுக் கொண்டதாகவும் அவர் தெரிவித்தார்.

“பெரும்பாலான பிரச்சனைகள் தீர்க்கப்பட்டிருக்க வேண்டும். இதைதான் நடப்பு அரசாங்கம் செய்து தரும் என்று வாக்குறுதி அளித்திருந்தது” என்று அன்வார் கூறியதாக ஷங்கர் தனது முகநூல் பக்கத்தில் குறிப்பிட்டிருந்தார்.

#TamilSchoolmychoice

மிக முக்கியமாக அடையாளக் அட்டை பிரச்சனையை முன்வைத்ததாகவும், அதன் தொடர்பாக இருக்கும் சிக்கல்களையும் நிவர்த்தி செய்வதற்கு நடவடிக்கைகள் எடுக்கபப்ட வேண்டும் என்றும் தாம் கேட்டுக் கொண்டதாக அவர் தெரிவித்தார்.

தனிப்பட்ட முறையில் பிரதமர் மகாதீர் பதவியிலிருந்து விலக வேண்டும் என்று ஷங்கர் குறிப்பிட்டுள்ளார். வாக்குறுதி அளித்தபடி டத்தோஶ்ரீ அன்வார் இப்ராகிம் பிரதமர் பதவியை ஏற்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.