கோலாலம்பூர்: நஜிப் ரசாக் மீதான எஸ்ஆர்சி இண்டர்நேஷனல் வழக்கு விசாரணையை அரசாங்க தலைமை வழக்கறிஞர் டோமி தோமஸ் அதிகாரப்பூர்வமாக முடித்து வைத்தார். இதனிடையே, நஜிப் ரசாக் மீதான முடிவை உயர்நீதிமன்றம் வருகிற நவம்பர் 11-ஆம் தேதி வழங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
“இந்த வழக்கு விசாரணை கடந்த ஏப்ரல் 3-ஆம் தேதி தொடங்கியது, இப்போது 57-வது சாட்சியுடன் (ரோஸ்லி உசேன்) முடிவடைந்துள்ளது. நாங்கள் 66 சாட்சிகளை விசாரித்தோம். இதை மனதில் கொண்டு, நான் வழக்கை முறையாக மூடுகிறேன்,” என்று தோமஸ் கூறியதாக மலேசியாகினி பதிவிட்டுள்ளது.
இதற்கிடையே, கோலாலம்பூர் உயர்நீதிமன்ற நீதிபதி கொலின் லாரன்ஸ் செகுவேரா முன் நஜிப்பின் 2.28 பில்லியன் ரிங்கிட் 1எம்டிபி வழக்கு விசாரணை நாளை புதன்கிழமை தொடங்கி இந்த வாரம் வியாழக்கிழமை வரை நடக்க இருப்பது குறிப்பிடத்தக்கது.