Home One Line P1 டிரம்ப்பைப் போன்ற ஒரு தலைவர் மலேசியாவை ஆட்சி செய்யும் நிலை ஏற்படலாம்!- சைட் இப்ராகிம்

டிரம்ப்பைப் போன்ற ஒரு தலைவர் மலேசியாவை ஆட்சி செய்யும் நிலை ஏற்படலாம்!- சைட் இப்ராகிம்

756
0
SHARE
Ad

கோலாலம்பூர்: ஒரு அரசியல்வாதி, இனம் மற்றும் மதம் தொடர்பான பிரச்சனைகளை கையாளும் போது தனது அடிப்படை மதிப்புகளை தியாகம் செய்யாமல் இருப்பது முக்கியம் என்பதை முன்னாள் தேசிய முன்னணி அமைச்சரான சைட் இப்ராகிம் இன்று வியாழக்கிழமை நினைவுப்படுத்தினார்.

தற்போதைய அடையாளத்திற்கான போராட்டம் எனும் நிலையில், ஒற்றுமையை கட்டியெழுப்ப முயற்சிக்க, மக்களுக்கு வலுவான கொள்கை ரீதியான தலைவர்கள் தேவை என்று சைட் கூறினார்.

இல்லையென்றால், நீங்கள் டொனால்டு டிரம்ப்பாக ஆகிவிடுவீர்கள். அனைத்தையும் நாசம் செய்யக்கூடியவராகி விடுவீர்கள், அமைதி மற்றும் நிலைத்தன்மையை உருவாக்க விடமாட்டிர்கள்என்று அவர் மலேசியாகினியிடம் கூறினார்.

#TamilSchoolmychoice

பல்வேறு சர்ச்சைக்குரிய கொள்கைகளுக்காக அறியப்பட்ட அமெரிக்காவின் 45-வது அதிபர் டிரம்பை சைட் குறிப்பிட்டுக் கூறினார்.

பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் பங்கேற்ற 2019-ஆம் ஆண்டுக்கான தேசிய தினக் காணொளியைக் குறித்த தனது கருத்துக்களை சைட் இவ்வாறு முன் வைத்தார். அக்காணொளியில், பிரதமர் தமக்கு கடினமான பணியாக இருப்பது பல்வேறு இனங்களைக் கொண்ட நாட்டினை ஆட்சி செய்வததுதான் என்று குறிப்பிட்டிருந்தார்.

94 வயதான அவர் பல்வேறு இனங்கள் மற்றும் மதங்களைக் கொண்ட ஒரு நாட்டைக் கையாள வேண்டியிருப்பதால், அவர் சந்தித்த சிரமங்களை தாம் புரிந்து கொண்டதாக சைட் கூறினார்.

ஒரு பொறுப்புள்ள அரசாங்கம் சிறுபான்மை குழுக்களை, பெரும்பான்மையினரை பாதுகாக்கும் அதே மனப்பான்மையில் பாதுகாக்கும்என்று அவர் கூறினார்.