Home One Line P2 விமர்சனங்களுக்குப் பிறகு குழந்தைகளுக்கான புதிய வலைத்தளத்தை யூடியூப் உருவாக்குகிறது!

விமர்சனங்களுக்குப் பிறகு குழந்தைகளுக்கான புதிய வலைத்தளத்தை யூடியூப் உருவாக்குகிறது!

1201
0
SHARE
Ad

வாஷிங்டன்: கூகுளுக்குச் சொந்தமான காணொளி சேவை தளமான யூடியூப், அதன் பிரதான தளத்தில் குழந்தைகளுக்கு பொருத்தமற்ற காணொளிகளை காண்பித்ததற்காக விமர்சிக்கப்பட்டு விசாரிக்கப்பட்ட பின்னர், தற்போது குழந்தைகளுக்காக ஒரு தனி வலைத்தளத்தைத் தொடங்கப்போவதாகத் தெரிவித்துள்ளது.

யூடியூப் கிட்ஸ் (YouTube Kids ) கைபேசி பயன்பாட்டின் இணைய பதிப்பான புதிய தளம், இந்த வார இறுதியில் நேரலைக்கு வரும் என்று அந்நிறுவனம் கடந்த ஆகஸ்டு 27-ஆம் தேதியன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

கிட்ஸ் பயன்பாடு மற்றும் வலைத்தளம் வெவ்வேறு வயதினருக்கு புதிய வகைகளைக் கொண்டிருக்கும் என்று யூடியூப்  கூறியுள்ளது. “பாலர் பள்ளி” பிரிவு, நான்கு வயது மற்றும் அதற்கும் கீழ் உள்ள குழந்தைகளுக்கு வகைப்படுத்தப்படும். “இளையவர்பிரிவு, ஐந்து வயது முதல் ஏழு வயது வரையிலும், “மூத்தவர்பிரிவு, எட்டு முதல் 12 வயது வரையிலானவர்களுக்கு இயங்கும் என்று அது குறிப்பிட்டுள்ளது.

#TamilSchoolmychoice

நான்கு வயது குழந்தைக்கு சிறந்த உள்ளடக்கமாகத் தோன்றும் உள்ளடக்கங்கள்,10 வயது குழந்தைக்கு சிறந்த உள்ளடக்கமாக இருக்காது என்பதை நாங்கள் அறிவோம். அதனால்தான் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கான சரியான உள்ளடக்கத்தை தேர்ந்தெடுப்பதை எளிதாக்க விரும்புகிறோம்.” என்று அந்நிறுவனம் வலைப்பதிவு இடுகையில் தெரிவித்துள்ளது.