Home One Line P1 “பொடுல்: வெப்பமண்டல புயல் சபா நீரிணையைத் தாக்கலாம்!”- மெட் மலேசியா

“பொடுல்: வெப்பமண்டல புயல் சபா நீரிணையைத் தாக்கலாம்!”- மெட் மலேசியா

766
0
SHARE
Ad

கோலாலம்பூர்: வெப்பமண்டல புயல் (பொடுல்) சபா நீரிணையைத் தாக்கும் என்று மலேசிய வானிலை மையம் (மெட்மலேசியா)  எச்சரிக்கை வெளியிட்டுள்ளது.

இன்று வியாழக்கிழமை காலை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், வெப்பமண்டல புயல் சபாவிற்கு மேற்கே அதிகபட்சமாக மணிக்கு 83 கிலோமீட்டர் வேகத்தில் நகர்கிறது என்று கூறியுள்ளது.

“இன்று காலை 8 மணியளவில், வெப்பமண்டல புயல் தற்போது ஹனோய், வியட்நாமில் இருந்து தென்கிழக்கில் 722 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. மேலும், புயல் நிலைக்கு அருகிலுள்ள நகரமான சபாவின் குடாட் இருக்கிறது. வடமேற்கே 1,305 கி.மீ தொலைவில் இந்நகரம் உள்ளது. இந்த நிலைமை சபா நீரிணையில் பலத்த காற்று மற்றும் கடல் கொந்தளிப்பை ஏற்படுத்தக்கூடும்என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.