“எனவே எங்கள் இலக்கு 20 ஆண்டுகளுக்கு முன்பு பட்டம் பெற்று இன்னும் கடனைத் திருப்பிச் செலுத்தாதவர்கள். அவர்கள் இன்னும் கடனைத் திருப்பிச் செலுத்த இயலாமல் இருக்கிறது என்பது ஏற்க கூடியதில்லை.” என்று அவர் தெரிவித்தார்.
தொழிலாளர் சேமநல நிதி வாரியம் (இபிஎப்) மற்றும் உள்நாட்டு வருமான வரித்துறை (எல்எச்டிஎன்) ஆகியவை தற்போது பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ள அரசாங்க நிறுவனங்கள் என்று மஸ்லீ கூறினார்.
கடந்த 1999-ஆம் ஆண்டிலிருந்து 2019-ஆம் ஆண்டு ஜூலை வரையிலும் சுமார் 902,881 மாணவர்களுக்கு 1.33 பில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள கடனை பிடிபிடிஎன் வழங்கியுள்ளது.