Home One Line P1 “நம்பிக்கைக் கூட்டணி தேர்தலில் தோல்வியடையும் எனும் கருத்தை ஏற்று, ஆராய்வோம்!”- அன்வார் இப்ராகிம்

“நம்பிக்கைக் கூட்டணி தேர்தலில் தோல்வியடையும் எனும் கருத்தை ஏற்று, ஆராய்வோம்!”- அன்வார் இப்ராகிம்

785
0
SHARE
Ad

கோலாலம்பூர்: எதிர்காலத்தில் பொதுத் தேர்தல் நடத்தப்பட்டால் நம்பிக்கைக் கூட்டணி தோல்வியடையும் என்று எதிர்பார்க்கப்படுவதாக அறிவித்த அதன் தலைவர்களுக்கு எதிரான பெர்சாத்து கட்சி எடுத்த நிலைப்பாட்டினை பிகேஆர் எடுக்காது என்று கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம் தெரிவித்தார்.

இருப்பினும், தனது கூட்டணி கட்சிகளின் கருத்துக்களை கட்சி ஆராயும் என்று தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

அது பெர்சாத்துவின் ஒன்றுபட்ட பார்வை. ஆனால் என்னைப் பொறுத்தவரை, எதுவாக இருந்தாலும் நாம் ஆராய வேண்டும், அவர்கள் கூறிய விவகாரம் என்வென்று பார்க்க வேண்டும், பின்பு அதனை கவனமாகக் கவனிக்க வேண்டும். எவ்வாறாயினும், கருத்துக்களை வெளிப்படுத்த பிகேஆரில் இடம் உள்ளது. எனவே, பிகேஆர் தலைவர்கள் அவ்வாறு செய்தால் எந்த நடவடிக்கையும் இல்லை, ”என்று அவர் இன்று வெள்ளிக்கிழமை செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.

நம்பிக்கைக் கூட்டணி தேர்தலில் தோல்வியடைய முடியும் என்று கூறி கட்சிக்கு களங்கம் விளைவிக்கும் உறுப்பினர்களுக்கு எதிராக பெர்சாத்து நடவடிக்கை எடுக்கும் என்று மகாதீரின் அறிக்கையைக் குறித்து அன்வார் இவ்வாறு கருத்து தெரிவித்தார்.

அவர் எந்த பெயர்களையும் குறிப்பிடவில்லை என்றாலும், அவர் பெர்சாத்துவின் கொள்கை மற்றும் மூலோபாயத்தின் தலைவர் டாக்டர் ராயிஸ் ஹுசினைக் குறிப்பிடுவதாக நம்பப்படுகிறது.