Home One Line P2 “நான் பதவி விலகுவதாகக் கூறவில்லை, நிலைமையை என்னால் கட்டுப்படுத்த முடியும்!”- கேரி லாம்

“நான் பதவி விலகுவதாகக் கூறவில்லை, நிலைமையை என்னால் கட்டுப்படுத்த முடியும்!”- கேரி லாம்

749
0
SHARE
Ad

ஹாங்காங்: ஹாங்காங்கின் தலைவரான கேரி லாம்,  ஒருபோதும் தாம் பதவி விலக முன்வரவில்லை என்று கூறியுள்ளார்.

தாம் பதவி விலக இருப்பதாகக் கூறிய குரல் பதிவு வெளிவந்த ஒரு நாள் கழித்து அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.வாய்ப்பிருந்தால் நான் பதவியை விட்டு விலகுவேன்” என்று அப்பதிவில் இருந்துள்ளது.

இன்று செவ்வாய்க்கிழமை செய்தியாளர்கள் கூட்டத்தில், லாம் அக்குரல் பதிவின் உண்மைத் தன்மையை கேள்விக்குட்படுத்தினார்.

#TamilSchoolmychoice

நான் ஒருபோதும் மத்திய மக்கள் அரசாங்கத்திற்கு எனது பதவி விலகலை முன்வைத்ததில்லை.  அவ்வாறு செய்வதைப் பற்றி சிந்திக்கவில்லை . பதவி விலகுவது எனது சொந்த விருப்பம். இந்த முட்டுக்கட்டையிலிருந்து வெளியே வர என் அணியை வழிநடத்த என்னால் முடியும் என்று நான் நம்புகிறேன். ” என்று லாம் தெரிவித்தார்.

கடந்த 1997-இல் சீன கட்டுப்பாட்டுக்கு திரும்பியதிலிருந்து மிக மோசமான அரசியல் நெருக்கடிக்குள் ஹாங்காங் தள்ளப்பட்டுள்ளது. பல மாதங்களாக ஹாங்காங் மக்களின் ஆர்ப்பாட்டங்களுக்கு வழி காண இயலாத அரசாங்கம் அவர்களை ஒடுக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வந்தபோதும், மக்களின் சீற்றம் குறைவது போல் இல்லை.

கடந்த மூன்று மாத ஆர்ப்பாட்டங்களில், சீனாவின் பிரதான நிலப்பகுதிக்கு ஒப்படைக்க அனுமதிக்கும் ஒரு மசோதாவைத் தொடங்கி, பின்னர் அது ஒரு பரந்த ஜனநாயக இயக்கமாக மாறியுள்ளது.  ஜூலை மாதத்தில், லாம் சர்ச்சைக்குரிய மசோதாவை இரத்து செய்வதாகக் கூறியிருந்தார்.

ஆனால் மசோதா புதுப்பிக்கப்படுமோ என்ற அச்சத்தில் ஆர்ப்பாட்டக்காரர்கள், அதை நிரந்தரமாக திரும்பப் பெறக் கோரி தொடர்ந்து எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். எதிர்ப்பாளர்களிடம் காவல் துறையினரின் நடத்தை குறித்து விசாரணையைத் தொடங்குவது மற்றும் நேரடித் தேர்தல்களைச் செயல்படுத்துவது உள்ளிட்ட பிற கோரிக்கைகளை லாம் மறுத்துவிட்டார்.