Home One Line P2 இந்திய திரையுலகிற்கு மகுடம் சூட்டும் திரைப்படமாக ‘பொன்னியின் செல்வன்’, அதிகரிக்கும் நடிகர் பட்டாளம்!

இந்திய திரையுலகிற்கு மகுடம் சூட்டும் திரைப்படமாக ‘பொன்னியின் செல்வன்’, அதிகரிக்கும் நடிகர் பட்டாளம்!

1313
0
SHARE
Ad

சென்னை: தமிழ் மற்றும் இந்தியத் திரையுலகிற்கு மகுடம் சூட்டும் படமாக அமைய இருப்பது ‘ பொன்னியன் செல்வன்’ திரைப்படமென்பது குறிப்பிடத்தக்கது.

பல வருடங்களாக பல்வேறு திரைப்பட இயக்குனர்கள் கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலை திரைப்படமாக வெளியிட முயற்சித்த போதும், அதனை இயக்குனர் மணிரத்னம் கையில் எடுத்து தற்போது கதாபாத்திரங்களை அடுக்கிக் கொண்டு வருவது, இத்திரைப்படத்தின் முக்கியத்துவத்தையும், அதன் பிரம்மாண்டத்தையும் பிரதிபலிக்கிறது.

இப்படத்தில் நடிப்பதற்காக முன்னதாக ஜெயம் ரவி, விக்ரம், கார்த்தி, அமிதாப் பச்சன், மோகன் பாபு, ஜெயராம், ஐஸ்வர்யா ராய், கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, அமலா பால் மற்றும் ஐஸ்வர்யா லஷ்மி ஆகியோர் ஒப்பந்தமாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. தற்போது இப்படத்தில் நடிக்க பிரபல முன்னணி நடிகை திரிஷா ஒப்பந்தமாகியுள்ளார்இப்படியாக இந்திய திரையுலகின் முக்கிய நடிகர்களின் பங்கு இப்படத்தில் அதிகரித்துக் கொண்டே செல்லும் நிலையில், இரசிகர்களின் எதிர்ப்பார்ப்பை இப்படம் மேலும் அதிகரித்துள்ளது.

#TamilSchoolmychoice

பொன்னியன் செல்வன் படத்தை லைகா நிறுவனம் பிரமாண்டமாகத் தயாரிக்கவுள்ளது. பொன்னியின் செல்வன் படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கவுள்ளார். இப்படத்திற்கான முன்தயாரிப்பு வேலைகள் மும்முரமாக நடந்துக் கொண்டிருக்கிறது.