Home One Line P1 பெர்மாத்தா அறக்கட்டளைக்கு சொந்தமான 4.9 மில்லியன் பறிமுதல்!

பெர்மாத்தா அறக்கட்டளைக்கு சொந்தமான 4.9 மில்லியன் பறிமுதல்!

686
0
SHARE
Ad

கோலாலம்பூர்: மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (எம்ஏசிசி), 1எம்டிபி மோசடி வழக்கில் பெர்மாத்தா அறக்கட்டளையில் இருந்து (யாயாசான் பெர்மாத்தா மலேசியா) 4.9 மில்லியன் ரிங்கிட்டை பறிமுதல் செய்ய கோலாலம்பூர் உயர்நீதிமன்றம் அனுமதி அளித்தது.

ஜீனியஸ் அறக்கட்டளை என தற்போது பெயர் மாற்றம் கண்டுள்ள இந்த அறக்கட்டளையைச் சார்ந்த டாக்டர் நோரைஷா ஸ்பாகாட் பறிமுதல் வழக்குக்கு எதிர்ப்பு தெரிவிக்காததால் நீதிபதி கொலின் லாரன்ஸ் செக்வெரா இந்த முடிவை எடுத்தார்.

கடந்த ஜூன் 21-ஆம் தேதியன்று, 41 தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களிலிருந்து 270 மில்லியன் ரிங்கிட்டைக் கைப்பற்ற எம்ஏசிசி சிவில் வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தது.

#TamilSchoolmychoice

பெயரிடப்பட்ட அமைப்புகளில் பெர்மாத்தா அறக்கட்டளையும் அதில் ஒன்றாகும்.

முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்கின்  தனிப்பட்ட அம்பேங்கின் கணக்கிலிருந்து, பெர்மாத்தாவிற்கு இந்த பணம் விநியோகிக்கப்பட்டதாக எம்ஏசிசி தலைமை ஆணையர் லத்தீஃபா கோயா தெரிவித்தார்.