Home One Line P1 நகைச்சுவை நடிகர் ஏ.ஆர்.படோலின் மகன் இராணுவ கண்காட்சியின் போது அசல் துப்பாக்கி குண்டு பாய்ந்து உயிர்...

நகைச்சுவை நடிகர் ஏ.ஆர்.படோலின் மகன் இராணுவ கண்காட்சியின் போது அசல் துப்பாக்கி குண்டு பாய்ந்து உயிர் இழந்தார்!

1321
0
SHARE
Ad
படம்: நன்றி பெர்னாமா

கோத்தா கினபாலு: மலேசிய மூத்த நகைச்சுவை நடிகர் ஏ.ஆர்.படோலின் மகன் இங்குள்ள லோக் காவி இராணுவ முகாமில் நடந்த கண்காட்சியின் போது அசல் துப்பாக்கி குண்டு பாய்ந்து மரணமுற்றார்.

இன்று புதன்கிழமை காலை 9.20 மணியளவில் தற்செயலான துப்பாக்கிச் சூட்டைத் தொடர்ந்து,  மேஜர் முகமட் ஜாகிர் அர்மாயா இங்குள்ள குயின் எலிசபெத் மருத்துவமனையில் உயிர் நீத்தார். மருத்துவமனையில் பிரேத பரிசோதனை நடத்தப்படுகிறது.

லோக் காவி இராணுவ முகாமில் 13-வது படைப்பிரிவு மற்றும் 5-வது காலாட்படைப் பிரிவைத் தொடங்குவதை முன்னிட்டு நடைபெற்ற இராணுவ கண்காட்சியில் மேஜர் முகமட் ஜாகிர் கலந்து கொண்டார்.

#TamilSchoolmychoice

இது குறித்து தமது ஆழ்ந்த இரங்கலை தற்காப்பு அமைச்சர் முகமட் சாபு தெரிவித்துக் கொண்டார்.

இந்த சூழ்நிலையில் அவரது குடும்பம் கடினமாக சூழலை எதிர்கொள்ளும் என்று நான் நம்புகிறேன். தற்காப்பு அமைச்சில் நாமும் அவர்களின் இழப்புக்கு அனுதாபம் கொள்கிறோம். இறந்தவரின் குடும்பத்திற்கு மரியாதை செலுத்தும் அடையாளமாக பிரேத பரிசோதனை முடிவடையும் வரை பொதுமக்கள் எந்தவிதமான ஊகங்களையும் (மரணம் தொடர்பாக) செய்ய மாட்டார்கள் என்று நான் நம்புகிறேன்என்று அமைச்சர் குறிப்பிட்டிருந்தார்.