Home One Line P2 யூடியூப்: வெறுப்பு-பேச்சு கொள்கைக்கு எதிராக செயல்பட்ட மில்லியன் கணக்கான காணொளிகள் நீக்கம்!

யூடியூப்: வெறுப்பு-பேச்சு கொள்கைக்கு எதிராக செயல்பட்ட மில்லியன் கணக்கான காணொளிகள் நீக்கம்!

1088
0
SHARE
Ad

லாஸ் ஏஞ்சல்ஸ்: வெறுக்கத்தக்க உள்ளடக்கங்கள் கொண்ட காணொளிகள் தொடர்ந்து காணொளி தளத்தில் ஒரு பிரச்சனையாக இருந்து வந்தாலும், யூடியூப் அதன் வெறுப்புபேச்சு ஒடுக்குமுறையின் விளைவாக 2019-ஆம் ஆண்டின் இரண்டாவது காலாண்டில், அதன் கொள்கைக்கு எதிராக செயல்பட்ட காணொளிகள் மற்றும் அலைவரிசைகளை முடக்கியது என்று குறிப்பிட்டுள்ளது. 

கடந்த ஜூன் மாதத்தில், கூகுளுக்குச் சொந்தமான காணொளித் தளமான யூடியூப், தனது வெறுப்புபேச்சு கொள்கைக்கான புதுப்பிப்பை அறிவித்தது. வயது, பாலினம், இனம், சாதி, மதம் போன்ற குணங்களின் அடிப்படையில் பாகுபாடு, பிரித்தல் அல்லது விலக்குதல் ஆகியவற்றை நியாயப்படுத்தும் பொருட்டு ஒரு குழு உயர்ந்தது என்று குற்றம் சாட்டும் வகையிலான காணொளிகளை தடைசெய்தது. 

ஹோலோகாஸ்ட் போன்ற சில வன்முறை நிகழ்வுகள் நடந்ததாக மறுக்கும் சதி கோட்பாடுகளை ஆதரிக்கும் காணொளிகளை யூடியூப் வெளிப்படையாக தடைசெய்தது.

#TamilSchoolmychoice

நேற்று செவ்வாயன்று ஒரு வலைப்பதிவு இடுகையில், கொள்கை மாற்றமானது முந்தைய வழக்கமான காலாண்டுகளுடன் ஒப்பிடும்போது வெறுப்புபேச்சு மீறல்களுக்காக 2019-ஆம் ஆண்டுக்கான இரண்டாவது காலாண்டில் அகற்றப்பட்ட காணொளிகளின் எண்ணிக்கை (111,185) மற்றும் அலைவரிசைகள் (17,818) ஐந்துமடங்குஅதிகரிக்கவழிவகுத்ததுஎன்று குறிப்பிட்டுள்ளது.

புதுப்பிக்கப்பட்ட வெறுப்புபேச்சுக் கொள்கையின் விளைவாக, காலாண்டில் அகற்றப்பட்ட மொத்த கருத்துக்கள் கிட்டத்தட்ட 538 மில்லியனாக, இரு மடங்காக அதிகரித்துள்ளதாகவும், முன்னர் அனுமதிக்கப்பட்ட பழைய கருத்துகள், காணொளிகள் மற்றும் அலைவரிசைகளை அகற்றுவதன் காரணமாக நீக்குதல்களின் அளவு அதிகரிப்பதாகவும் யூடியூப் கூறியது.

எவ்வாறாயினும், குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலான யூடியூப் அலைவரிசைகள் யூதவிரோத மற்றும் வெள்ளை மேலாதிக்க உள்ளடக்கத்தை தொடர்ந்து பரப்புகின்றன என்று அவதூறு எதிர்ப்பு கூட்டிணைப்பு மையம் கடந்த மாதம் வெளியிடப்பட்ட  தீவிரவாதம் பற்றிய ஆய்வில் குறிப்பிட்டுள்ளது.