Home One Line P2 போரிஸ் ஜான்சன் அதிகாரத்தில் இருந்தாலும், ஆட்சி கட்டுப்பாட்டில் இல்லை!

போரிஸ் ஜான்சன் அதிகாரத்தில் இருந்தாலும், ஆட்சி கட்டுப்பாட்டில் இல்லை!

872
0
SHARE
Ad

பிரிட்டன்: ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் வெளியேறுவதை தாமதப்படுத்த கோரும் மசோதா தொடர்பாக பிரிட்டன் நாடாளுமன்றத்தில் நடந்த வாக்குப்பதிவில், அதற்கு ஆதரவாக 328 வாக்குகளும், எதிராக 301 வாக்குகளும் கிடைத்துள்ளன.

ஒப்பந்தம் இல்லாமல் பிரெக்சிட் உடன்படிக்கை ஏற்படுவதை தடுக்க தேவையான சட்டத்தை, கன்சர்வேட்டிவ் கட்சியை சேர்ந்தவர்களும்,  எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களும் எதிர்த்துள்ளனர்.

இந்த வாக்குப்பதிவு பற்றி குறிப்பிட்டு பதிலளித்த பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன், நாட்டில் பொதுத் தேர்தல் வழக்கத்தைவிட முன்னதாகவே நடத்திட வழி செய்யும் மசோதாவை தாம் கொண்டுவர உள்ளதாக தெரிவித்தார். தேர்தல் நடப்பதற்கு முன் பிரெக்சிட் தொடர்பான மசோதா நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்படும் என்று தொழிலாளர் கட்சியின் தலைவர் ஜெர்மி கார்பைன் கூறியுள்ளார்.

#TamilSchoolmychoice

பிரெக்சிட் காலக்கெடு முடிவதற்கு இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் செப்டம்பரில் தங்கள் பணியைத் தொடங்கி சில நாள்களிலேயே நாடாளுமன்றம் இடைநீக்கம் செய்யப்படும் என்று கடந்த வாரத்தில் அறிவிக்கபட்டது. அதன் பிறகு, அரசியின் உரை அக்டோபர் 14-ஆம் தேதி இடம் பெறும் என்றும் அதில் ஒரு சில திட்டங்கள் பற்றிய விவரங்கள் வெளியாகும் என்று பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்திருந்தார்.