Home One Line P1 தீபாவளி சந்தையை டிபிகேஎல் நிருவகிக்க வேண்டும்!

தீபாவளி சந்தையை டிபிகேஎல் நிருவகிக்க வேண்டும்!

828
0
SHARE
Ad
படம்: நன்றி அவானி

கோலாலம்பூர்: அக்டோபர் 27-ஆம் தேதி கொண்டாடப்பட இருக்கும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, தீபாவளி சந்தை நிருவகிக்கும் பிரச்சனைகளில், கூட்டரசு பிரதேச அமைச்சர் காலிட் சமாட் தலையிட வேண்டும் என்று வணிகர்கள் மற்றும் அரசியல் கட்சியின் பிரதிநிதிகள் குழு கேட்டுக் கொண்டுள்ளனர்.

கோலாலம்பூரில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் தீபாவளி சந்தையை நிருவகிக்கும் தரப்பாக கோலாலம்பூர் மாநகர் மன்றம் (டிபிகேஎல்) இருக்க வேண்டும் என்று அவர்கள் கோருகிறார்கள்.

தீபாவளி சந்தையை இயக்கும் சில தரப்புகள், சிறு வணிகர்களை ஏமாற்றி, விற்பனைத் தளத்தை அதிக விலைக்கு விற்கப்படுவதால், அவற்றை வாங்கும் கட்டாயத்தில் வணிகர்கள் உள்ளதாக அவர்கள் கூறினர்.

#TamilSchoolmychoice

கடந்த மே மாதம் ரமலான் சந்தையில் நடந்ததைப் போலவே, இந்த ஆண்டு தீபாவளி சந்தை நிருவகிக்கும் பிரச்சனையில் தலையிடுமாறு நாங்கள் கூட்டரசு அமைச்சரை கேட்டுக் கொள்கிறோம்.” என்று சிறுபான்மை உரிமைகள் நடவடிக்கை அமைப்பின் (மீரா) பொதுச் செயலாளர் கூறினார்.

மூன்றாம் தரப்பினருக்கு பதிலாக டிபிகேஎல்லிடமிருந்து வணிக தளங்களை வாடகைக்கு எடுக்கும் வசதியை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.

டிபிகேஎல்லில் வாடகைக்கு எடுத்த ஒரு தளத்தின் விலை குப்பை, மின்சாரம் மற்றும் நீர் கட்டணம் உள்ளிட்டவைகளுக்கு 500 ரிங்கிட்டாகும். ஆனால், மூன்றாம் தரப்பினரிடம் செல்லும் போது அது இரட்டை விலைக்கு வாடகைக்கு விடப்படுகிறது.

மூன்றாம் தரப்பு அந்த இடத்தை எடுத்து 5,000 ரிங்கிட் வரையிலும் வணிகருக்கு வாடகைக்கு விடுகிறது. நாங்கள் ஏற்கனவே அமைச்சர்கள் மற்றும் டிபிகேஎல் ஆகியோருக்கு கடிதங்களை எழுதியுள்ளோம். அவர்கள் எதிர்காலத்தில் எங்களைப் கவனிப்பார்கள் என்று நம்புகிறோம்என்று அவர் கூறினார்.

இதற்கிடையில், சிலாங்கூர் மற்றும் கோலாலம்பூர் இந்தியர் சிறு வணிகர்கள் சங்கத்தின் தலைவர் ஆர்.அரசு, துன் அப்துல் ரஹ்மான் சாலை மற்றும் பிரிக்பீல்ட்ஸ் தீபாவளி சந்தைகளின் அசல் இருப்பிடம் இனி பண்டிகை வணிகங்களுக்கு ஏற்றது அல்ல என்றார்.

தார் சாலை மற்றும் பிரிக்பீல்ட்ஸ் மேம்படுத்தப்பட்டு வருகிறது, அதே நேரத்தில் போக்குவரத்து சிக்கல்கள் இருப்பதால் அவை பொருத்தமற்றது. எனவே, டிபிகேஎல் ஜாலான் ராஜாவில் தீபாவளி சந்தை அமைக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்,” என்று அவர் கூறினார்.