Home One Line P1 வெள்ளிக்கிழமை ஜாவி எழுதும் நாளாக முஜாஹிட் அறிவித்தார்!

வெள்ளிக்கிழமை ஜாவி எழுதும் நாளாக முஜாஹிட் அறிவித்தார்!

1022
0
SHARE
Ad

கோலாலம்பூர்: ஜாவி எழுத்தை வலுப்படுத்தும் முயற்சியாக வெள்ளிக்கிழமை தோறும், ஜாவி எழுத்தை பயன்படுத்தும் நாளாக அறிவிக்கப்பட்டதுள்ளது என்று பிரதமர் துறை அமைச்சர் டாக்டர் முஜாஹித் யூசோப் தெரிவித்துள்ளார்.

ஜாவி எழுத்து நாட்டின் வரலாற்றை மீட்டெடுப்பதற்கான ஒரு தளமாகும் இது அமையும் என்று அவர் குறிப்பிட்டார். மலேசியாவும், மலாய் மொழியும் தேசத்துக்கும் மக்களுக்கும் இடையிலான உத்தியோகபூர்வ தகவல் தொடர்பு ஊடகமாக ஜாவியை பயன்படுத்தியுள்ளதை அவர் சுட்டிக் காட்டினார்.

இந்த மனப்பான்மையில், நம் தேசத்தின் மரபுகள் மற்றும் கலாச்சாரத்தை நாம் பராமரிப்போம்.  எல்லா இனங்களும் இதற்கு ஆதரிக்கின்றன, ஏனெனில் ஜாவி மலாய் உரிமைகள் அல்ல, ஆனால் நமது மலேசிய பாரம்பரியம். இந்த முயற்சி புத்துயிர் அளிப்பதோடு, பாரம்பரியத்தை பாதுகாக்கும் என்று நம்புவோம். பிற அமைச்சுகளும், நாம் மதிக்கும் மற்றும் போற்றும் நமது தேசத்தின் கலாச்சார மரபுகளை பாதுகாப்பதில் ஜாவி இலக்கியத்தின் மறுமலர்ச்சியில் பங்குபெற ஊக்குவிக்கும் என்று நம்பப்படுகிறது,” என்று அவர் நேற்று ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

ஜாவி எழுத்தை ஒரு இஸ்லாமியமயமாக்கல் செயல்முறையாக நான் ஒருபோதும் கருதவில்லை. அது இஸ்லாமிய நிருவாகத்திற்கு நெருக்கமாக இருந்தாலும், அதிகாரப்பூர்வ பயன்பாட்டு மட்டத்தில் ஜாவி கிட்டத்தட்ட அழிந்துபோகும் போது, ​​இஸ்லாமிய நிருவாகங்கள் மட்டுமே அக்கலாச்சாரத்தின் வரலாறு பாதுகாக்கப்படுவதை உறுதி செய்கிறது, ”என்று அவர் கூறினார்.