Home One Line P1 முஸ்லிம் அல்லாத தொழில்முனைவோரின் தயாரிப்புகளை புறக்கணிக்கும் நடவடிக்கையை அமைச்சரவை எதிர்க்கிறது!

முஸ்லிம் அல்லாத தொழில்முனைவோரின் தயாரிப்புகளை புறக்கணிக்கும் நடவடிக்கையை அமைச்சரவை எதிர்க்கிறது!

738
0
SHARE
Ad

கோலாலம்பூர்: முஸ்லிம் அல்லாத தொழில்முனைவோரின் தயாரிப்புகளை புறக்கணிக்கும் நடவடிக்கையை அமைச்சரவை நிராகரித்து, இம்மாதிரியான பிரச்சாரங்கள் நியாயமற்றது என்று விவரித்ததுள்ளது.

சில தரப்பினர்கள் இன உணர்வின் அடிப்படையில் குறுகிய எண்ணத்துடன் விளையாட முயற்சிக்கும் இந்த நிலைப்பாடானது, நாட்டின் நல்லிணக்கத்தையும் நல்வாழ்வையும் பாதிக்கக்கூடும் என்பதால் அமைச்சரவை இதனை நிராகரிக்கிறது. அதற்கு பதிலாக, மலேசியா தயாரிப்புகளை வாங்குவதற்கு ஆதரவளிக்க மக்கள் அழைக்கப்படுகிறார்கள், ஏனெனில் இது நாட்டிற்கு பயனளிக்கும்என்று பிரதமர் துறை அறிக்கை தெரிவித்துள்ளது.

நேற்று புதன்கிழமை துணைப் பிரதமர் டாக்டர் வான் அசிசா டாக்டர் வான் இஸ்மாயில் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் பின்னர் இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

#TamilSchoolmychoice

முஸ்லிம் தயாரிப்புகளை வாங்குவதை ஊக்குவிக்கும் நோக்கில்முஸ்லிம் தயாரிப்புகளை முதலில் வாங்குங்கள்பிரச்சாரம் கடந்த ஆண்டு இறுதியில் இயங்கி வருகிறது.

சமூக ஊடகங்களில் அதிகமான மக்களைக் கொண்டிருக்காத அத்தளம், ஆகஸ்டு மாதத்தில் ஒரு சிலரின் தீவிர பிரச்சாரத்திற்கு ஆளானது. இப்பிரச்சாரத்தின் சில ஆதரவாளர்கள் முஸ்லிம் அல்லாத தயாரிப்புகளை புறக்கணிக்க மக்களைத் தூண்டும் நிலை உண்டாயிற்று.