Home One Line P1 “ஜாவி எழுத்து – அவசரத் திணிப்பு வேண்டாம்” டான்ஸ்ரீ குமரன் கோரிக்கை

“ஜாவி எழுத்து – அவசரத் திணிப்பு வேண்டாம்” டான்ஸ்ரீ குமரன் கோரிக்கை

799
0
SHARE
Ad

கோலாலம்பூர் : “ஆரம்ப பள்ளிகளில் ஜாவி எழுத்து திடீர் அறிமுகம் செய்யப்படுவது அப்பள்ளிகளுக்கு தங்கள் பிள்ளைகளை அனுப்பும் பெற்றோர்களிடையே அதிச்சியையும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. பக்காத்தான் ஆட்சியில் அமைச்சரவை செய்த முடிவை நாங்கள் ஏற்றுகொண்டு செயல்படுத்துகிறோம் என்று கூறும் துணை அமைச்சரின் கருத்து ஏற்படையதன்று” என முன்னாள் துணையமைச்சரான டான்ஸ்ரீ க.குமரன் என அறிக்கை ஒன்றின்வழி கண்டித்துள்ளார்.

“பக்காத்தான் அரசு செய்ததை எல்லாம் தமிழ்ப் பள்ளிக்கூட விசயத்தில் இவர்கள் செய்யவில்லையே?” என்றும் கேள்வி எழுப்பிய குமரன் “ஆரம்பப் பள்ளிக்கூடம் என்பது நாட்டின் எதிர்கால நற்குடிகனை உருவாக்கும், வடிவமைக்கும் மையாமாகும். புனிதமான அந்த மையத்தில். ஜாவி எழுத்தின் அறிமுகம், நல்ல குடிமகன் உருவாக எவ்வாறு துணை செய்யும்? அல்லது இளம் மாணவர்களிடையே, இன இணக்கம், சமய புரிந்துணர்வும் உருவாக ஜாவி எழுத்து திணிப்பு எந்த வகையில் உதவும் என்பதனை கல்வி அமைச்சு அவசியம் விளக்கவேண்டும். கல்விக் கொள்கை என்பது, நாடு, மக்கள் இவற்றின் தேவையின் அடிப்படையில்தான் அமைய வேண்டுமேயொழிய, ஆட்சிக்கு வருகிற கட்சிகளோ, , கல்வி அமைச்சோ, தாங்கள் நினைப்பதை, கண்டதை, கேட்டதை மாணவர்களிடம் திணிக்கும் முயற்சியில் கல்வி அமைச்சு ஈடுபடக்கூடாது” என முன்னாள் தமிழ்ப் பள்ளி தலைமையாசிரியருமான குமரன் வலியுறுத்தினார்.

“கோவிட்-19 தாக்கத்தால் நாட்டு மக்கள் பல்வேறு பிரச்சினைகளை எதிர்நோக்கி வருகிற வேளையில், ஜாவி எழுத்து அறிமுகத்தை அவசர-அவசரமாக திணிக்கும்  முயற்சியை கல்வி அமைச்சு கைவிடவேண்டுவதுடன், பல இன, மொழி கல்விமான்கள், , பெற்றோர்கள் ஆகியோரின் கருத்தறிந்தபின் இது குறித்து ஒரு முடிவினை எடுக்கவேண்டும்” என்றும் குமரன் சம்பந்தப்பட்ட தரப்புகளைக் கேட்டுக் கொண்டார்.