Home One Line P2 முன் கூட்டியே தேர்தல் நடத்துவதற்கு போரிஸ் ஜான்சனுக்கு நாடாளுமன்றத்தில் எதிர்ப்பு!

முன் கூட்டியே தேர்தல் நடத்துவதற்கு போரிஸ் ஜான்சனுக்கு நாடாளுமன்றத்தில் எதிர்ப்பு!

593
0
SHARE
Ad

பிரிட்டன்: பாரிஸ் ஜான்சன் பொதுத் தேர்தலுக்கான தனது தீர்மானத்தை நாடாளுமன்ற உறுப்பினர்கள் நிராகரித்ததைத் தொடர்ந்து நாடாளுமன்றத்தில் இரட்டை தோல்வியைச் சந்தித்துள்ளார்.

ஒப்பந்தம் இல்லாமல் பிரெக்சிட் நிகழ்வதை தடுக்க தேவையான சட்டத்தை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றுவதற்கு பிரிட்டன் அரசு எடுத்த முயற்சியை கன்சர்வேட்டிவ் கட்சியை சேர்ந்தவர்கள் மற்றும் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் முதல் கட்டத்தில் தேல்வியடையச் செய்தனர்.

அதன் பின்னர், பொதுத் தேர்தலை முன்னதாகவே நடத்தப்போவதாக பிரதமர் போரிஸ் ஜான்சன் கூறி வந்தார். பிரெக்சிட் ஒப்பந்தம் ஏற்படாமல் பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்தைவிட்டு வெளியேறுவதை அனுமதிக்கும் மசோதா நிறைவேறாமல் தடுத்து நாடாளுமன்றம் எதிர்வினையாற்றியுள்ளது.

#TamilSchoolmychoice

இந்த மசோதாவை முறித்துக் கொண்டார் என்றும், இப்போது ஒரே வழி தேர்தல்தான் என்று போரிஸ் கூறி வருகிறார். ஆனால், தொழிற்கட்சித் தலைவர் ஜெர்மி கோர்பின், பிரதமர் ஒப்பந்தமில்லாத பிரெக்சிட்டை கட்டாயப்படுத்த ஒரு கேவலமான விளையாட்டை விளையாடுவதாக குற்றம் சாட்டினார்.

மசோதா நிறைவேற்றப்பட்ட பின்னர் தனது கட்சி தேர்தலை ஆதரிக்கும் என்று அவர் கூறினார். ஆனால், அதற்கு முன்னதாக தேர்தல் நடப்பதற்கு அனுமதிக்க மாட்டோம் என்று அவர் கூறியுள்ளார்.

அக்டோபர் 15-ஆம் தேதி ஒரு பொதுத் தேர்தலுக்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒப்புக் கொள்ள வேண்டும் என்று ஜான்சன் விரும்பியது குறிப்பிடத்தக்கது.