Home One Line P1 உம்மா ஒன்றிணைப்பு பெயர் மாற்றப்படும், பல இன மக்களை உள்ளடக்கிய தேசிய ஒன்றிணைப்பாக மாற்றப்படலாம்!

உம்மா ஒன்றிணைப்பு பெயர் மாற்றப்படும், பல இன மக்களை உள்ளடக்கிய தேசிய ஒன்றிணைப்பாக மாற்றப்படலாம்!

825
0
SHARE
Ad

கோலாலம்பூர்: அம்னோ மற்றும் பாஸ் கட்சிகளுக்கிடையிலான உம்மா ஒன்றிணைப்பு கருப்பொருள், இந்நாட்டின் பல இன சமூகத்தை உள்ளடக்கிய, தேசிய ஒற்றுமையாக மாற்றப்படலாம் என்று வட்டாரம் தெரிவித்துள்ளது.

உம்மாஎன்ற சொல்லைப் பயன்படுத்துவதன் மூலம் கட்சியில் சிலர், இது முஸ்லிம்களுக்கான ஒரு குறிப்பிட்ட நிகழ்ச்சி நிரல் என்று கருதுவதற்கு வாய்ப்புள்ளதாகத் தெரிவித்ததாக அது தெரிவித்தது. ஆயினும், பல இன மலேசியர்களுடனான ஒத்துழைப்பு இதுவாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆகஸ்ட் 31-ஆம் தேதி, அம்னோவின் துணைத் தலைவர் முகமட் ஹசான், உம்மா ஒன்றிணைப்பு எனும் கருப்பொருளை வேறு பெயருக்கு மாற்ற முடிவு செய்துள்ளதாக அறிவித்திருந்தார்.

#TamilSchoolmychoice

அக்கருப்பொருள் தொடர்பாக ஒரு சர்ச்சை இருந்ததால், நாட்டில் உள்ள அனைத்து மக்களின் பங்களிப்பையும் பிரதிபலிக்கும் வகையில் இந்த விவகாரம் முடிவு செய்யப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

இதற்கிடையில், மலேசியாகினி அம்னோவின் உச்சமட்டக் குழு உறுப்பினர் தாஜுடின் அப்துல் ரஹ்மானிடம் இக்கருப்பொருள் குறித்து உறுதிப்படுத்துமாறு கேட்டபோது, அவர் கருத்து ஏதும் தெரிவிக்க மறுத்து, சாசனம் கையெழுத்து இடும் நாளில் அறிவிப்புக்காக காத்திருக்குமாறு பொதுமக்களைக் கேட்டுக்கொண்டார்.

எவ்வாறாயினும், ஒத்துழைப்பு நிகழ்ச்சி நிரலை அனைத்து மலேசியர்களுக்குமானதாக விரிவாகப் பார்க்க வேண்டும் என்று பாசிர் சாலாக் நாடாளுமன்ற உறுப்பினருமான தாஜுடின் ஒப்புக் கொண்டார்.

மலேசியர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும், ஒன்றுபடுவதற்கும் ஒரு பரந்த நிகழ்ச்சி நிரல் எங்களிடம் உள்ளது. மேலும், உம்மாவின் ஒற்றுமை மலாய் முஸ்லிம்கள் ஒற்றுமை மட்டுமல்ல, அனைவருக்குமானது,” என்று அவர் மேலும் கூறினார்.