Home One Line P1 சாஹிட்-அன்வார் குரல் பதிவு: புதிய ஒத்துழைப்புக்கான சமிக்ஞை! – பாஸ்

சாஹிட்-அன்வார் குரல் பதிவு: புதிய ஒத்துழைப்புக்கான சமிக்ஞை! – பாஸ்

980
0
SHARE
Ad

கோலாலம்பூர்: அம்னோ தலைவர் அகமட் சாஹிட் ஹமிடி மற்றும் பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராகிம் ஆகியோருக்கு நடந்த தொலைபேசி உரையாடல் குறித்த குரல் பதிவு, புதிய அரசியல் ஒத்துழைப்புக்கு வழிக்காட்டுவதாக பாஸ் தெரிவித்துள்ளது.

“இது புதிய ஒத்துழைப்பின் ஒரு பகுதியாகும். இது ஓர் அடையாளம்,” என்று பாஸ் தலைவர் அப்துல் ஹாடி அவாங் இன்று ருசிலாவில் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.

பிகேஆருடன் அம்னோ ஒத்துழைப்பை உருவாக்கினால், கட்சி அம்னோவுடன் தொடர்ந்து பணியாற்றுமா என்று அவரிடம் கேட்கப்பட்டதற்கு, கட்சி அதனை விரும்பாது எனவும், தேசிய கூட்டணியுடன் இருக்கும் என்ற எண்ணத்தை அவர் அளித்தார்.

#TamilSchoolmychoice

“நாங்கள் தேசிய கூட்டணியுடன் தொடர்கிறோம். புதிய ஒத்துழைப்புகளை நாங்கள் நிராகரிக்கிறோம், ஏற்க மாட்டோம்,” என்று அவர் மேலும் கூறினார்.

முன்னதாக, குரல் பதிவு விவகாரத்தை அகமட் சாஹிட் ஹமிடி மறுத்துள்ளார். தனக்கும் அன்வாருக்கும் இடையிலான உரையாடல் இல்லை என்றும், இந்த குற்றச்சாட்டுகளால் தாம் ஏமாற்றமடைந்ததாகவும் அவர் கூறினார்.

அதன் பிறகு அன்வாரும் இந்த விஷயத்தை மறுத்து காவல் துறையில் புகார் அளிப்பதாகக் கூறியிருந்தார்.