Home One Line P2 தமிழக சட்டமன்றத் தேர்தல்: 446.28 கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் பறிமுதல்

தமிழக சட்டமன்றத் தேர்தல்: 446.28 கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் பறிமுதல்

790
0
SHARE
Ad

சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தலின் போது ரொக்கப் பணம், நகைகள், மதுபானங்கள், பரிசுப் பொருட்கள் என மொத்தம் 446.28 கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

உரிய ஆவணங்களின்றி எடுத்து செல்லப்பட்ட 236 கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ள நிலையில், 173 கோடி ரூபாய் மதிப்பிலான தங்க நகைகளும், 5.27 கோடி ரூபாய் மதுபானங்கள், 1.95 கோடி ரூபாய்க்கான சேலை உள்ளிட்ட துணிமணிகள், 23.14 கோடி ரூபாய் மதிப்பிலான குக்கர், குடம் உள்ளிட்ட பரிசுப் பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து வாக்குப்பதிவு நாள் வரை தமிழக முழுவதும் இவை பறிமுதல் செய்யப்பட்டன.