கட்சி அரசியலமைப்பின் படி, கட்சித் தலைமையின் நிறைவு காலம் முடிந்ததும் ஒவ்வொரு மூன்று வருடங்களுக்கும் அம்னோ தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும்.
“அம்னோ அரசியலமைப்பின் படி, 18 மாதங்களுக்கு கட்சித் தேர்தலை ஒத்திவைக்க உச்சமன்றத்திற்கு உரிமை உண்டு. தற்போதைய அம்னோ தலைமைக்கான நிறைவு காலம் ஜூன் 30 ஆகும். ஆனால் தேர்தலை ஒத்திவைக்க விரும்பினால், அது உச்சமன்றத்தின் முடிவு, ” என்று அவர் கூறினார்.
அம்னோ தேர்தல் இந்த ஆண்டு நடைபெற்றிருக்க வேண்டும். ஆனால், தேர்தலை ஒத்திவைக்க ஒரு தரப்பும், 15- வது பொதுத் தேர்தலுக்கு முன் செயல்படுத்தப்பட வேண்டும் என்று ஒரு தரப்பும் குறிப்பிட்டு வருகின்றனர்.
Comments