Home One Line P2 கொவிட்-19: பிரேசில் கையாண்ட விதம் குறித்து விசாரிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

கொவிட்-19: பிரேசில் கையாண்ட விதம் குறித்து விசாரிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

917
0
SHARE
Ad

பிரேசில்லா: கொவிட்-19 நெருக்கடியை அரசாங்கம் கையாண்டது குறித்து விசாரிக்க பிரேசில் உச்சநீதிமன்ற நீதிபதி வியாழக்கிழமை செனட்டுக்கு உத்தரவிட்டார்.

நீதிமன்றம் தொற்றுநோய் தாக்கத்தின் போது தேவாலயங்கள் மீண்டும் திறக்கப்படுவதைத் தடுக்கலாம் என்றும் தீர்ப்பளித்தது. அதிபர் ஜெய்ர் போல்சனாரோவிற்கும் நீதித்துறையுக்கும் இடையிலான பதட்டங்களை மேலும் இது அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பொல்சனாரோ கொவிட்-19 தொற்று அச்சுறுத்தலைக் குறைத்து மதிப்பிட்டுள்ளார். அதே நேரத்தில் பணிநிறுத்தங்கள், பொருளாதார தாக்கங்கள் தொற்றுநோயை விட அதிகமான பிரேசிலியர்களுக்கு தீங்கு விளைவிக்கும் என்றும் வாதிடுகிறார்.

#TamilSchoolmychoice

சமீபத்திய வாரங்களில், பிரேசில் தொற்றுநோய் நெருக்கடியின் மையமாக மாறியுள்ளது. இங்கு கொவிட்-19 காரணமாக ஏற்பட்ட இறப்புகள், உலக இறப்புகளின் கால் பங்கிற்கு வித்திட்டுள்ளது.