Home One Line P1 மாட்டா: சுற்றுலாவுக்கான மலேசியாவில் அதிகம் விரும்பப்படும் தலமாக ஜோகூர் தேர்வு!

மாட்டா: சுற்றுலாவுக்கான மலேசியாவில் அதிகம் விரும்பப்படும் தலமாக ஜோகூர் தேர்வு!

947
0
SHARE
Ad

ஜோகூர் பாரு: செப்டம்பர் 2019-ஆம் ஆண்டுக்கான மலேசிய சுற்றுலா மற்றும் பயண முகவர்கள் சங்கம் (மாட்டா) கண்காட்சியில், ஜோகூர் மாநிலம்மலேசியாவின் விரும்பப்படும் தலம்என்று முடிசூட்டப்பட்டுள்ளது.

ஜோகூர், அதன் அழகிய தீவுகள், வளமான பாரம்பரியம் மற்றும் உலகத்தரம் வாய்ந்த பூங்காக்களுடன் தனிச் சிறப்பை கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

சிங்கப்பூர், சீனா, இந்தியா, ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளில் இருந்து உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகை ஜோகூருக்கு அதிகரித்து வருவதாக மாட்டா தலைவர் டத்தோ டான் கோக் லியாங் தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

நான் பார்த்த விளம்பரங்களின் அடிப்படையில், வழக்கமான பிடித்தவைகளுக்கு அப்பாற்பட்ட இடங்கள் மற்றும் குறைவாக அறியப்பட்ட இடங்கள் விளம்பரப்படுத்தப்படுவதைக் கண்டு நான் மகிழ்ச்சியடைகிறேன். ஜோகூர் பெவிலியனில் பல்வேறு வகையான 20 அற்புதமான இடங்களை பார்வையாளர்கள் தேர்வு செய்யலாம்” என்று இன்று சனிக்கிழமை புத்ரா உலக வணிக மையத்தில் நாட்டின் மிகப்பெரிய பயண கண்காட்சியின் அதிகாரப்பூர்வ தொடக்க விழாவில் அவர் கூறினார்.

ஜோகூர் மாநிலத்திற்கான வருகை ஆண்டாக 2020-ஆம் ஆண்டினை விரைவில் அறிவிக்கவுள்ளதால், மாட்டா கண்காட்சியில் அதிக எண்ணிக்கையிலான சாவடிகளை அம்மாநிலம் எடுத்துள்ளதாக ஜோகூர் மந்திரி பெசார் டத்தோ டாக்டர் ஷாருடின் ஜமால் கூறினார்.

ஜோகூரிலிருந்து வருவதால், எனது மாநிலத்திற்கு ஏராளமான சலுகைகள் உள்ளன என்பதை என்னால் உறுதிப்படுத்த முடியும், இந்த ஆண்டுக்கான மலேசியாவின் விருப்பமான இடமாக ஜோகூர் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதில் நாங்கள் மிகவும் பெருமிதம் கொள்கிறோம், இது மாநில அரசுக்கு ஒரு மரியாதைஎன்று ஷாருடின் தனது உரையில் கூறினார்.

மாட்டா கண்காட்சி செப்டம்பர் 6 முதல் 8 வரையில் புத்ரா உலக வணிக மையத்தில் நடைபெறுகிறது. காலை 10 மணி முதல் இரவு 9 மணி வரை இக்கண்காட்சி திறந்திருக்கும்.