Home One Line P1 மலேசியர்களுக்கு எதிராக நடந்த வன்முறையை குறைத்து மதிப்பிட்ட இந்தோனிசிய காவல் துறையை சைட் சாதிக் சாடினார்!

மலேசியர்களுக்கு எதிராக நடந்த வன்முறையை குறைத்து மதிப்பிட்ட இந்தோனிசிய காவல் துறையை சைட் சாதிக் சாடினார்!

723
0
SHARE
Ad

கோலாலம்பூர்: மலேசியா, இந்தோனிசியா உலகக் கோப்பை தகுதிப் போட்டியில் இரசிகர்கள் தண்ணீரை தெறித்தார்கள் என்று இந்தோனிசிய காவல் துறை, அவ்விடத்தில் வெடித்த வன்முறையை குறைத்து மதிப்பிட்டதற்காக இளைஞர் மற்றும் விளையாட்டு அமைச்சர் சைட் சாதிக் இந்தோனிசிய காவல் துறையை சாடியுள்ளார்.

அவர்கள் தண்ணீரை தெறித்தார்கள் என்றால், நிலைமை மீண்டும் அமைதியாக இருக்கும் வரை ஏன் விளையாட்டு நிறுத்தப்பட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதுஎன்று சைட் சாதிக் இன்று சனிக்கிழமை அதிகாலையில் டுவிட்டரில் கேள்வி எழுப்பியுள்ளார்.

கண்ணீர் புகை குண்டுகளை ஏன் சுட வேண்டும்?”

#TamilSchoolmychoice

நாங்கள் ஏன் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக தனிமைப்படுத்தப்பட்டோம்?”

என் கண்களுக்கு முன்னால் ஆதரவாளர்கள் ஏன் உலோகப் பொருட்களை எறிந்தார்கள்?”

நான் இதற்கான நீதியைக் கோருகிறேன்,” என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.

இந்தோனிசிய மெட்ரோ ஜெயா காவல்துறை மக்கள் தொடர்பு ஆணையர் ஆர்கோ யுவோனோ மைதானத்தில் ஒரு கலவரமும் இல்லை என்று மறுத்ததை மேற்கோளிட்டு சிஎன்என் இந்தோனிசியா அறிக்கைக்கு சைட் சாதிக் பதிலளித்தார்.

இந்தோனிசிய ஆதரவாளர்கள் வெறுமனே தண்ணீரை தெறிக்கிறார்கள் என்று ஆர்கோ கூறியிருந்தார்.