Home One Line P1 இராணுவ வீரர் மரணம்: கவனக்குறைவு என காவல் துறை விசாரித்து வருகிறது!

இராணுவ வீரர் மரணம்: கவனக்குறைவு என காவல் துறை விசாரித்து வருகிறது!

698
0
SHARE
Ad

கோலாலம்பூர்: லோக் காவி இராணுவ முகாமில் கடந்த புதன்கிழமை நடந்த கண்காட்சியின் போது கொல்லப்பட்ட மேஜர் முகமட் ஜாகிர் அர்மயா தொடர்பான விசாரணைகள் கவனக்குறைவினால் ஏற்பட்டன எனும் வாதத்திற்கு வழிவகுத்துள்ளது.

தண்டனைச் சட்டம் பிரிவு 304ஏ கீழ் இந்த வழக்கு விசாரிக்கப்பட்டு வருவதாகவும், விசாரணைக்கு உதவ பல நபர்கள் வரவழைக்கப்படுவார்கள் என்றும் சபா மாநில காவல் துறைத் தலைவர் டத்தோ உமார் மம்மா தெரிவித்தார்.

இதுவரையிலும், விசாரணைகள் கவனக்குறைவு என்ற கோணத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆனால், மேலதிக விசாரணைகள் நடந்து கொண்டிருக்கின்றன,” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

#TamilSchoolmychoice

துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் தொடர்புடைய இராணுவ உறுப்பினர்கள் உட்பட 11 நபர்கள் சாட்சியமளிக்க அழைக்கப்பட்டுள்ளதாக உமார் கூறினார்.

இந்த சம்பவம் குறித்து முழு விசாரணையை மேற்கொண்டு வருவதாகவும், சம்பவத்தின் உண்மையான காரணத்தைக் கண்டறிய காவல் துறை முனைப்புக் காட்டுவதாகவும், காவல் துறைத் தலைவர் டத்தோஶ்ரீ அப்துல் ஹாமிட் படோர், கடந்த வியாழக்கிழமை கூறியிருந்தார்.

11-வது சிறப்புப் படை படைப்பிரிவின் தளபதி மேஜர் முகமட் ஜாகிர் அர்மயா (36), ஐந்தாவது மலேசிய காலாட்படை ( பிரிவு 5) மற்றும் 13-வது மலேசிய காலாட்படை படைப்பிரிவின் கண்காட்சியின் போது துப்பாக்கிக் குண்டு பாய்ந்ததால் காலமானார்.