Home One Line P1 நாட்டில் காற்று தூய்மைக்கேடு மோசமான நிலையை எட்டி வருகிறது!

நாட்டில் காற்று தூய்மைக்கேடு மோசமான நிலையை எட்டி வருகிறது!

810
0
SHARE
Ad

கோலாலம்பூர்: நேற்று திங்கட்கிழமை காலை முதல் நாட்டை சூழ்ந்துள்ள புகை மூட்டத்தைத் தொடர்ந்து கிள்ளான் பள்ளத்தாக்கு முழுவதும் காற்று மாசுபாடு குறியீட்டு (ஏபிஐ) அளவீடுகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.

நேற்று காலை 10 மணியளவில், கிள்ளானில் காற்று மாசுபாடு 91 குறியீட்டை எட்டிய நிலையில், ஷா அலாமில் 96, புத்ராஜெயாவில் 99, பெட்டாலிங் ஜெயாவில் 100 மற்றும் செராஸ்ஸில் 101 என்று பதிவாகி உள்ளன.

இன்று செவ்வாய்க்கிழமை காலை 9 மணியளவில், அனைத்து பகுதிகளிலும் ஏபிஐ அளவீடுகள் 119 மற்றும் அதற்கு மேல் அதிகரித்துள்ளன.

#TamilSchoolmychoice

கிள்ளானில் 119 அளவீடும், அதைத் தொடர்ந்து ஷா அலாம் (125), புத்ராஜெயா (133), பெட்டாலிங் ஜெயா (134), செராஸ் (140) என்று பதிவாகி உள்ளன.

காற்று மாசுபாடு குறியீடு 51 முதல் 100 வரை இருப்பது ஒரு மிதமான நிலை என்றும், இது ஆரோக்கியத்திற்கு எந்தவிதமான பாதிப்பையும் ஏற்படுத்தாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 101 முதல் 200 வரையிலான குறீட்டு அளவுகள் ஆரோக்கியமற்றதாகக் கருதப்படுகிறது. இது இதயம் மற்றும் நுரையீரல் சிக்கல்கள் போன்ற அதிக ஆபத்துள்ளவர்களின் ஆரோக்கியத்தை மேலும் மோசமாக்கும்.