கோவை: அண்மையில் யூடியூப்பில் மிக பிரபலமாக வலம் வந்துக் கொண்டிருந்த கோவையைச் சேர்ந்த “1 ரூபாய் இட்லி பாட்டி” கமலாத்தாளுக்கு பல்வேறு தரப்புகளிடமிருந்து உதவிகள் குவிந்து வருகிறது.
கோவையில் ஒரு ரூபாய்க்கு இட்லி விற்பனை செய்துவரும் கமலாத்தாள் என்ற பாட்டிக்கு உதவி செய்ய தயாராக இருப்பதாக மகேந்திரா குழுமத்தலைவர் ஆனந்த் மகேந்திரா தெரிவித்துள்ளார்.
85 வயது மூதாட்டி தள்ளாத வயதிலும் உரலில் மாவாட்டி இட்லி சுட்டு விற்று வருகிறார். மேலும், தற்போதையக் காலக்கட்டத்தில் விலைவாசிகள் உயர்ந்துள்ள நிலையிலும் அவர் ஒரு ரூபாய்க்கு இட்லி விற்று அதனால் தமக்கு இழப்பு ஏற்பட்டாலும், விலையை உயர்த்தப்போவதில்லை எனவும் கமலாத்தாள் குறிப்பிட்டுள்ளார்.
கமலாத்தாள் பற்றிய செய்தி அறிந்த மகேந்திரா குழுமத்தலைவர் ஆனந்த் மகேந்திரா, பாட்டிக்கு பாராட்டு தெரிவித்துள்ளார். அவரின் தொழிலுக்கு தேவையான உதவிகளை செய்யத் தயாராக இருப்பதாக தெரிவித்துள்ள ஆனந்த மஹிந்த்ரா, கமலாத்தாள் பாட்டிக்கு எரிவாயு அடுப்பு வாங்கித்தர தயாராக இருப்பதாகவும் கூறியுள்ளார். மேலும், பல்வேறு தரப்பினர்களிடமிருந்து பாட்டிக்கு பாராட்டுகளும் உதவிகளும் குவிந்து வருகிறது.