Home One Line P2 பாரிஸில் முன்னோடி சிகிச்சைக்குப் பின்னர் மைக்கேல் சூமாக்கர் உணர்வு நிலையுடன் இருக்கிறார்!

பாரிஸில் முன்னோடி சிகிச்சைக்குப் பின்னர் மைக்கேல் சூமாக்கர் உணர்வு நிலையுடன் இருக்கிறார்!

956
0
SHARE
Ad

பாரிஸ்: மைக்கேல் சூமாக்கர் உணர்வு நிலையுடன் இருப்பதாக, பாரிஸ் மருத்துவமனையில் ஒரு செவிலியர் கூறியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

எஃப் 1 கார் பந்தயப் போட்டியின் ஜாம்பவனாகத் திகழ்ந்த சூமாக்கருக்கு தண்டு உயிரணு சிகிச்சை பார்ஸில் அளிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

50 வயதான சூமாக்கர் வீக்கத்தைக் குறைக்கும் சிகிச்சைக்காக ஜார்ஜஸ் பாம்பிடோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஏறக்குறைய ஆறு ஆண்டுகளுக்கு முன்பு பனிச்சறுக்கு விபத்தில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டதன் காரணமாக சூமாக்கர் சுய நினைவு இழந்தார்.