வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல் நேற்று வியாழக்கிழமை, இந்த பயங்கரவாதத் தாக்குதலில் சம்பந்தப்பட்ட நபர்களின் பெயர்களை வெளியிட அமெரிக்க நீதித்துறை ஒப்புக் கொண்டதாகத் தெரிவித்தது.
வழக்கின் அசாதாரண அம்சங்களை குறிப்பிடுகையில், எஃப்பிஐ சவுதி அதிகாரியின் அடையாளத்தை வெளிப்படுத்துவதாகக் கூறியது, ஆனால் கூடுதல் தகவல்களை வெளியிடுவதற்கான வேண்டுகோளை நிராகரித்ததாக அது குறிப்பிட்டுள்ளது.
செப்டம்பர் 11 தாக்குதலில் பலியானவர்களின் உறவினர்களின் வழக்கறிஞர்கள் சம்பந்தப்பட்ட நபர்களின் பெயர்களை வெளியிடுமாறு அரசாங்கத்திடம் கேட்டுக் கொண்டுள்ளனர். இது எஃப்.பி.ஐயின் 2012 விசாரணையின் ஆவணத்தில் வெளிவந்துள்ளது.
அந்நபர் ஒரு சவுதி அதிகாரி. தெற்கு கலிபோர்னியாவில் இரண்டு கடத்தல்காரர்களுக்கு பயணிகள் விமானத்தை கடத்த உதவியதாகக் கூறப்படுகிறது.
இந்த தாக்குதலுடன் எந்த தொடர்பும் இல்லை என்று சவுதி அரசாங்கம் பலமுறை மறுத்து வருவது குறிப்பிடத்தக்கது. தாக்குதல் நடத்திய 19 பேரில் மொத்தம் 15 பேர் சவுதி அரேபியர்கள். அல்கொய்தா தலைவர் ஒசாமா பின்லேடன் ஒரு பிரபலமான சவுதி குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அல்கொய்தா நடத்திய இந்த தாக்குதலில் நியூயார்க் நகரத்தில் உள்ள உலக வணிக மையம், வர்ஜீனியாவில் பென்டகன் மற்றும் பென்சில்வேனியாவிலுள்ள ஒரு திடலில் மோதியதில் கிட்டத்தட்ட 3,000 பேர் உயிரிழந்தனர்.