Home One Line P2 மலேசிய தயாரிப்புகளை மேம்படுத்துவதற்காக அலிபாபா 2-வது மலேசியா வாரத்தை நடத்தவுள்ளது!

மலேசிய தயாரிப்புகளை மேம்படுத்துவதற்காக அலிபாபா 2-வது மலேசியா வாரத்தை நடத்தவுள்ளது!

952
0
SHARE
Ad

கோலாலம்பூர்: அலிபாபா குழுமம், மலேசிய மின்னியல் பொருளாதாரக் கூட்டுத்தாபனத்தின் (எம்டேக்) ஒத்துழைப்புடன், மலேசிய தயாரிப்புகளை சீனா முழுவதும் உள்ள நுகர்வோருக்கு அறிமுகம் செய்வதற்காக இரண்டாவது மலேசியா வாரத்தை நடத்துகிறது.

கடந்த 2018-ஆம் ஆண்டின் முதல் மலேசியா வாரத்தின் வெற்றியைத் தொடர்ந்து, இந்த ஆண்டின் நிகழ்ச்சி செப்டம்பர் 16 தொடங்கி 22 வரையிலும் நடைபெறும் என்றும் இதில் மலேசிய பொருட்கள் மற்றும் தயாரிப்புகளின் சிறப்பாக தேர்வு செய்யப்பட்டு இடம்பெறும் என்று இன்று வெள்ளிக்கிழமை ஓர்அறிக்கையின் வாயிலாகத் தெரிவித்தது.

அலிபாபா குழுமத்தின் உலகமயமாக்கல் அலுவலகத்தின் பொதுச் செயலாளர் ஜேம்ஸ் சாங் கூறுகையில், சீனாவில் மலேசிய தயாரிப்புகளுக்கான தேவை அதிகரித்து வருகிறது, குறிப்பாக விவசாய மற்றும் உணவுப் பொருட்களின் தேவை அதிகரித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளது.

#TamilSchoolmychoice

சீனாவில் உள்நாட்டு சந்தை அதிகரித்து வரும் வேளையில், மலேசிய வணிகர்கள் மலேசியா வாரத்தைப் பயன்படுத்தி வளர்ந்து வரும் தேவையை அறிந்து, தங்கள் தயாரிப்புகளை அதிக சீன நுகர்வோருக்கு வெளிப்படுத்தவும் ஏற்றுமதி விற்பனையை அதிகரிக்கவும் பயன்படுத்திக் கொள்ளலாம்.

சிறு மற்றும் நடுத்தர தொழில்முனைவோரின் (எஸ்எம்இ) ஏற்றுமதியை வளர்ப்பதில் மலேசியா உறுதிபூண்டுள்ளது என்றும், அலிபாபாவுடனான கூட்டு அந்த திசையில் ஒரு படியாகும் என்றும் எம்டேக்கின் தலைமை இயக்க அதிகாரி டத்தோ எங் வான் பெங் கூறினார். அலிபாபாவின் தளங்கள் மூலம், மலேசிய எஸ்எம்இ நிறுவனங்கள் தங்கள் தயாரிப்புகளை சீன சந்தையில் விரிவாக்கம் செய்ய முடியும் என்று அவர் கூறினார்.