Home One Line P1 “எங்களின் விசுவாசத்தைக் கேள்வியெழுப்ப ஜாகிர் யார்?” – பிபிசி நேர்காணலில் இராமசாமி மீண்டும் சாடல்

“எங்களின் விசுவாசத்தைக் கேள்வியெழுப்ப ஜாகிர் யார்?” – பிபிசி நேர்காணலில் இராமசாமி மீண்டும் சாடல்

1127
0
SHARE
Ad

ஜோர்ஜ் டவுன் – ஜாகிர் நாயக் விவகாரத்தில் பினாங்கு துணை முதல்வர் பேராசிரியர் பி.இராமசாமி காவல் துறை விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு, அவரிடமிருந்து வாக்குமூலம் பெறப்பட்டிருக்கும் நிலையில், இலண்டன் பிபிசி ஊடகத்தின் தமிழ்ப் பிரிவுக்கு வழங்கிய நேர்காணலில் “எங்களின் விசுவாசத்தைப் பற்றிக் கேள்வி எழுப்ப எங்கிருந்தோ வந்த இந்த ஜாகிர் நாயக் யார்?” என இராமசாமி மீண்டும் கேள்வி எழுப்பியுள்ளார்.

பிபிசி ஊடகத்தின் மலேசியாவுக்கான பிரதிநிதித்துவ ஊடகவியலாளர் சதீஷ் பார்த்திபனுக்கு தனது அலுவலகத்திலிருந்து வழங்கிய நேர்காணலில் ஜாகிர் நாயக் குறித்து மேலும் பல கருத்துகளை இராமசாமி முன்வைத்துள்ளார்.

அந்த நேர்காணலில் இராமசாமி தெரிவித்திருக்கும் கருத்துகளில் சில:

  • எனது பெற்றோர்கள் அந்தக் காலத்தில் இந்தியாவில் இருந்து வந்து இங்கே கடுமையாக உழைத்திருக்கிறார்கள். அந்த சமகாலத்தில் எனது பெற்றோர்களைப் போலவே, இந்தியர்கள் பலரும் உழைத்து இந்த நாட்டை உருவாக்குவதில் முக்கிய பங்காற்றினார்கள். அந்த சமயத்தில் காட்டை அழிக்கும்போது பலர் பாம்பு கடித்து இறந்திருக்கிறார்கள். அதைப் போலவே சீனர்களும் இந்த நாட்டை உருவாக்குவதில் கடுமையாகப் பாடுபட்டிருக்கிறார்கள். ஆனால், எங்கிருந்தோ, இன்னொரு நாட்டால் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டிருக்கும் ஜாகிர் எங்களின் விசுவாசத்தைப் பற்றிக் கேள்வி எழுப்புகிறார்.
  • எங்களைப் பற்றிக் கேள்வி எழுப்ப இவர் யார்? சில வருடங்களுக்கு முன்னர் 2015-இல் தான் இவருக்கு நிரந்தர வசிப்பிட அனுமதி முந்தைய அரசாங்கத்தால் வழங்கப்பட்டிருக்கிறது. இங்கே அடைக்கலம் தேடி வந்தவர் இவர். அதுகூட மலேசியாவில் நிரந்தர வசிப்பிட அனுமதி வழங்க பல நிபந்தனைகள் பின்பற்றப்படுகின்றன. எந்த அடிப்படையில் இவருக்கு நிரந்தர வசிப்பிட அனுமதி வழங்கப்பட்டது என்பதே கேள்விக் குறியாகும்.
  • துன் மகாதீர் ஒரு சிறந்த தலைவர். கடந்த பொதுத் தேர்தலில் அவருக்கு 85 விழுக்காடு இந்தியர்கள் ஆதரவு அளித்தனர். சீனர்களும் பெரும்பான்மையாக ஆதரித்தார்கள். மலாய்க்காரர்கள், சீனர்கள், இந்தியர்கள் என அனைவரும் இணைந்து அளித்த ஆதரவினால்தான் மகாதீர் வெற்றி பெற்று பிரதமராக முடிந்தது. இது தெரிந்தும் எங்களின் விசுவாசம் குறித்து ஜாகிர் நாயக் கேள்வி எழுப்பியிருக்கிறார்.
#TamilSchoolmychoice

பிபிசி ஊடகத்திற்கு இராமசாமி வழங்கிய நேர்காணலின் முழுவடிவத்தைக் கீழ்க்காணும் யூடியூப் இணைப்பில் காணலாம்: