Home One Line P1 மாமன்னர் தம்பதியினரை அவமதித்ததாகக் கூறப்படும் பிஎஸ்எம் கட்சியின் இளைஞர் பகுதித் தலைவர் கைது!

மாமன்னர் தம்பதியினரை அவமதித்ததாகக் கூறப்படும் பிஎஸ்எம் கட்சியின் இளைஞர் பகுதித் தலைவர் கைது!

804
0
SHARE
Ad

கோலாலம்பூர்: மாமன்னர் தம்பதியினரை சமூக ஊடகப் பக்கத்தில் அவமதித்தக் குற்றத்திற்காக பிஎஸ்எம் கட்சியின் இளைஞர் அணித் தலைவர் காலிட் இஸ்மாத்தை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

டாங் வாங்கி மாவட்ட காவல்துறை தலைவர் முகமட் பாஹ்மி விசுவநாதன் அப்துல்லாவை தொடர்பு கொண்டபோது இந்த விவகாரத்தை உறுதிப்படுத்தினார்.

சந்தேகத்திற்குட்பட்ட அந்நபரை புக்கிட் அமான் குற்றவியல் புலனாய்வுத் துறையின் (ஜேஎஸ்ஜே), குற்றவியல் புலனாய்வு பிரிவு (யுஎஸ்ஜேடி) கைது செய்துள்ளதாக அவர் குறிப்பிட்டார். மேலும், இந்த விவகாரம் குறித்து எந்தவொரு கருத்தும் அவர் தெரிவிக்க மறுத்துவிட்டார்.

#TamilSchoolmychoice

நேற்று வெள்ளிக்கிழமை, புக்கிட் அமான் குற்றவியல் புலனாய்வுத் துறை இயக்குனர் ஹுசிர் முகமட் இந்த வழக்கு தொடர்பான புகார் அறிக்கை தமக்கு கிடைத்ததாக தெரிவித்திருந்தார்.

அதன்படி, 1948-ஆம் ஆண்டு தேச நிந்தனைச் சட்டத்தின் கீழ் காவல் துறையினர் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

குறிப்பிட்ட ஒரு சில நபர்களின் எதிர்மறையான கருத்துக்களைத் தொடர்ந்து தெங்கு அசிசா தனது அதிகாரப்பூர்வ டுவிட்டர் கணக்கை செயலிழக்க செய்ததாக கூறப்படுகிறது.