Home One Line P1 நாட்டின் பொருளாதார வளர்ச்சியை மையப்படுத்திய அமைச்சரவை கூட்டத்தை மலேசியா நடத்துகிறது!

நாட்டின் பொருளாதார வளர்ச்சியை மையப்படுத்திய அமைச்சரவை கூட்டத்தை மலேசியா நடத்துகிறது!

665
0
SHARE
Ad

கோலாலம்பூர்: நாட்டின் பொருளாதார வளர்ச்சியை மையப்படுத்திய அமைச்சரவைக் கூட்டம் ஒன்று இன்று சனிக்கிழமை புத்ராஜெயாவில் நடக்க உள்ளது. வழக்கத்திற்கு மாறாக அமைச்சரவை உறுப்பினர்களின் சந்திப்பு இன்று சனிக்கிழமை கூட இருக்கிறது.

இன்றையக் கூட்டமானது நம்பிக்கைக் கூட்டணியின் மிக முக்கியமான சவால்களில் ஒன்றை முன்வைக்கும் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

நாட்டின் வளப்புக்கு அனைவரின் பங்கு எனும் கொள்கைக்கு உட்பட்டு, 2030-ஆம் ஆண்டளவில் மக்களுக்கு சிறந்த வாழ்க்கைத் தரத்தை வழங்குவதை நம்பிக்கைக் கூட்டணி நோக்கமாக கொண்டுள்ளது. இது அரசாங்கத்தின் குறிக்கோளும் ஆகும்.

#TamilSchoolmychoice

துன் டாக்டர் மகாதீர் முகமட் மற்றும் அவரது அமைச்சரவை உறுப்பினர்கள், பொருளாதார விவகார அமைச்சர் டத்தோஶ்ரீ அஸ்மின் அலியின் நேரடியான கருத்துகளை செவிமடுக்க உள்ளனர். புத்ராஜெயாவில் நடைபெறும் இக்கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்ட அமைச்சர்கள் தங்கள் கருத்துக்களை தெரிவிக்க வாய்ப்பு கிடைக்கும்.

கடந்த ஆண்டு அக்டோபர் 18-ஆம் தேதி 11-வது மலேசியா திட்ட இடைக்கால மறுஆய்வை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தபோது, நாட்டின் வளப்புக்கு அனைவரின் பங்கு எனும் கொள்கையை டாக்டர் மகாதீர் அறிவித்திருந்தார்.

இதன் மூலமாக மக்களின் வாங்கும் சக்தியை மேம்படுத்துவதோடு, வகுப்புகள், இனங்கள், பகுதிகள் மற்றும் விநியோகச் சங்கிலியில் தீவிர ஏற்றத்தாழ்வு ஆகியவற்றுக்கு இடையிலான வருமானம் மற்றும் செல்வ இடைவெளியை நீக்க உருதுனையாக அமையும் என்று நம்பப்படுகிறது.

கல்வி, திறன் பயிற்சி மற்றும் தொழில் முனைவோர் திட்டங்களை உள்ளடக்கிய முன்முயற்சிகளை உள்ளடக்கிய கிராமப்புறங்களில் பூர்வீக சபா வாழ் மக்கள், சரவாகியர்கள் மற்றும் பூர்வக்குடி மக்கள் ஆகியோருக்கு செயல்படுத்தப்பட வேண்டிய குறிப்பிட்ட திட்டங்கள் குறித்தும் பிரதமர் பேசியிருந்தார்.

இந்த 10 ஆண்டுகால தொலைநோக்கு பார்வைக்கு ஒரு முழுமையான முயற்சி தேவை, மாநில மற்றும் உள்ளூர் அரசாங்கங்கள், தனியார் துறை, கல்வி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் ஈடுபாடும் தேவைப்படுகிறது.