Home One Line P2 பிக் பாஸ் 3 : வனிதா வெளியேற்றப்பட்டார்

பிக் பாஸ் 3 : வனிதா வெளியேற்றப்பட்டார்

2738
0
SHARE
Ad

சென்னை – நேற்று ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 15) இரவு ஸ்டார் விஜய் தொலைக்காட்சி அலைவரிசையில் ஒளியேறிய பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் இந்த வாரம் வனிதா விஜயகுமார் இரசிகர்களால் வெளியேற்றப்பட்டார்.

ஏற்கனவே ஒருமுறை பிக்பாஸ் இல்லத்திலிருந்து வெளியேற்றப்பட்ட வனிதா, பின்னர் ‘வைல்ட் கார்ட் எண்ட்ரி’ முறையில் மீண்டும் இரசிகர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு பிக்பாஸ் இல்லத்திற்குள் அனுப்பப்பட்டார்.

இந்த வாரம் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட ஐவர் பங்கேற்பாளர்களால் பரிந்துரைக்கப்பட்டிருந்தனர். வனிதா, கவின், தர்ஷன், ஷெரின், சேண்டி ஆகியோரே அந்த ஐவராவர்.

#TamilSchoolmychoice

இவர்களில் பலரும் எதிர்பார்த்ததைப் போலவே வனிதா விஜயகுமார் வெளியேற்றப்பட்டார்.

கடந்த ஒருவாரமாக பிக்பாஸ் இல்லத்தில் எஞ்சியிருப்பவர்களின் குடும்ப உறுப்பினர்கள் வந்து அவர்களைச் சந்தித்துச் சென்றனர். இதன் காரணமாக இந்த வாரம் முழுவதும் சுவாரசியமான சம்பவங்களை பிக்பாஸ் 3 நிகழ்ச்சித் தொடர் கொண்டிருந்தது.

மலேசியாவிலிருந்து பங்கேற்கும் முகேனின் தந்தையும் காணொளி மூலம் முகேனுக்கு வாழ்த்துகள் தெரிவித்திருந்தார். ஏற்கனவே, முகேனின் தாயாரும் தங்கையும் பிக் பாஸ் இல்லத்திற்கு வந்து அவரைச் சந்தித்துச் சென்றனர். அந்த சமயத்தில் தந்தை வராதது குறித்து தனது வருத்தத்தை முகேன் பதிவு செய்திருந்தார்.

சனிக்கிழமை ஒளியேறிய நிகழ்ச்சியில் வெளியேற்றப்பட பரிந்துரைக்கப்பட்ட ஐவரில் யார் காப்பாற்றப்படுவார் என்பதைக் கோடி காட்டாமலேயே கமல் நிகழ்ச்சியை முடித்துக் கொண்டார்.

ஞாயிற்றுக்கிழமை நிகழ்ச்சியில் ஐவரில் காப்பாற்றப்படுபவர் யார் என்பதை ஒவ்வொருவராக பாடல்கள் மூலம் அடையாளம் காட்டினார் கமல். இறுதியில் வெளியேற்றப்படுவது வனிதா என அறிவித்தார்.

இதற்கிடையில் ஞாயிற்றுக்கிழமை நிகழ்ச்சியில் கமல் குறித்த படம் ஒன்றைக் காட்டப் போவதாகக் கூறிய பிக்பாஸ், கமல் குறித்து அவரது அண்ணன் சாருஹாசன் கூறிய கருத்துகளை காணொளியாகக் காட்டினார்.