Home One Line P1 “நம் சொந்த மக்கள்தான் நம் ஒற்றுமையை குலைக்கிறார்கள்!”- மகாதீர்

“நம் சொந்த மக்கள்தான் நம் ஒற்றுமையை குலைக்கிறார்கள்!”- மகாதீர்

752
0
SHARE
Ad

கூச்சிங்: நேற்றிரவு திங்கட்கிழமை கூச்சிங்கில் மலேசியா தினக் கொண்டாட்டத்தில் உரையாற்றிய பிரதமர் மகாதீர் முகமட் மலேசியர்களைப் பிளவுபடுத்தும் முயற்சிகளை எதிர்க்குமாறு வலியுறுத்தினார்.

நம் ஒற்றுமையை சீர்குலைக்க முயற்சிகள் செய்யப்படுகின்றன. அது நம் சொந்த மக்களால் செய்யப்படுகிறது. பயன்படுத்தப்படும் கருத்துகள் பெரும்பாலும் இனம், மதம், மாநிலம் மற்றும் இனக்குழுக்கள் சம்பந்தப்பட்ட உணர்ச்சிகரமான விசயங்களுடன் தொடர்புடையது. இந்த சிக்கல்களில் நாம் எளிதாக சிக்கிக் கொள்வோம், ஏனெனில் அவை நம் இதயத்திற்கு நெருக்கமானவை. ஆனால், நாம் தன்னம்பிக்கையுடன் விவேகமுள்ளவர்களாக இருந்தால், நாம் நம்மை அக்கருத்துகளுக்கு பாதிக்க அனுமதிக்க மாட்டோம்என்று அவர் தனது உரையில் கூறினார்.

மலேசியர்களில் பெரும்பான்மையானவர்கள் ஒற்றுமையை நிலைநிறுத்துவதில் ஒற்றுமையாக இருக்க குறுகிய மனப்பான்மையையும் பின்னடைவையும் நிராகரிப்பதாக அவர் நம்புவதாகக் குறிப்பிட்டார்.

#TamilSchoolmychoice

நமக்கிடையில் கருத்து வேறுபாடுகள் பொதுவானவை. இது ஒப்புக் கொள்ளப்பட வேண்டும், பாராட்டப்பட வேண்டும், சர்ச்சையின் ஒரு காரணியாக இருக்கக் கூடாது. இந்த வேறுபாடுகள் நமக்குள் சிறந்த தீர்வைக் காண விவாதிக்கப்பட வேண்டும்,” என்று அவர் கூறினார்.

ஒற்றுமையாக வாழ்வதென்பது எவ்வளவு கடினமானது என்பதை மலேசியர்கள் புரிந்து கொண்டால், அவர்கள் அதை எளிதாக எடுத்துக் கொள்ள மாட்டார்கள் என்றும் அவர் கூறினார்.