Home One Line P1 ஜோகூர் பாருவில் மின்னலின் தீபாவளி இசை நிகழ்ச்சி!

ஜோகூர் பாருவில் மின்னலின் தீபாவளி இசை நிகழ்ச்சி!

1201
0
SHARE
Ad

ஜோகூர் பாரு – ஆண்டுதோறும் தீபாவளிக் கொண்டாட்டங்களை தனது நேயர்களோடு இணைந்து கொண்டாடும் மின்னல் பண்பலை இந்த முறை ஜோகூர் நேயர்களை மகிழ்ச்சிப்படுத்த, தனது சிறப்பு தீபாவளி இசை நிகழ்ச்சியை எதிர்வரும் செப்டம்பர் 21ஆம் தேதி, சனிக்கிழமை, ஜோகூர் ஆடிட்டோரியம் ஆர்டிஎம் அரங்கில் (JOHOR AUDITORIUM RTM) மாலை மணி 6 தொடக்கம் நடத்துகின்றது.

ஜோகூர் நேயர்கள் தங்களின் தீபாவளிக் கொண்டாட்டத்தை மின்னலோடு தொடங்குங்கள் எனக் கேட்டுக் கொண்டுள்ள மின்னல் பண்பலை, ஜோகூர் கலைஞர்களின் படைப்புகளையும் இந்த நிகழ்ச்சியில் இரசிகர்களுக்காக படைக்கிறது.

இந்த நிகழ்ச்சிக்கான நுழைவு இலவசம்.

#TamilSchoolmychoice

ஜோகூர் இந்திய இசைக்குழு, ஜோகூர் நேயர்களிடம் மிகவும் பிரபலமான கலைஞர் செல்வம் மேற்பார்வையில், இசைக் கருவிகள் நேரடியாக வாசிக்கப்பட்டு (live band) பாடகர்கள் இந்த நிகழ்ச்சியில் பாடல்களை பாடவிருக்கின்றார்கள்.

ஜோகூர் கலைஞர்களான “அன்பே எனது அன்பே” பாடல் புகழ் லூர்துநாதன், “மங்கல ஒளி வீசும் தீபாவளி” பாடல் புகழ் சுகன்யா, மின்னலின் பாடல் திறன் போட்டியின் வெற்றியாளரான கார்த்திக், ஓ சோரியா (OH ZORIA) பாடல் புகழ் மதன் 80 ஆம் ஆண்டு பாடல் புகழ் சிவா, “என்னைக் கொல்லாதே” பாடல் புகழ் ”கேஷ்விணி” ஆகியோர் இந்நிகழ்ச்சியில் களம் இறங்குகிறார்கள்.

நம் நாட்டின் பிரபல மண்ணின் மைந்தர்களான ஹேவோக் பிரதர்ஸ் (HAVOC BROTHERS) குழுவின் அதிரடியான அட்டகாசமான பாடல் படைப்புகளையும் இரசிகர்கள் கண்டும் கேட்டும் இரசிக்கலாம்.

நம் நாட்டின் பிரபல பாடல் கலைஞர்களான திருச்செல்வம், சர்மிளா சிவகுரு, சித்தார்த்தன், தாச்சாயினி இவர்களின் அமர்க்களமான பாடல்களையும் கேட்டு ரசிக்கலாம்.

AMR நகைச்சுவை குழுவினர் நண்டு ரமேஷ் மற்றும் முருகேசுவின் நகைச்சுவை படைப்பு. இவர்களோடு வளரும் நகைச்சுவை கலைஞர்கள் குமரவர்மன், டினசினி (DHINASHINI), ஜெகதிஷ் ஆகியோரின் நகைச்சுவைப் படைப்புகளையும் இந்த நிகழ்ச்சியில் காணலாம்.

நேயர்களை நேரில் கண்டு மகிழ்விக்க மின்னல் எப் எம் அறிவிப்பாளர்கள் நேரடியாக இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார்கள்.

மின்னலின் சிறப்பு தீபாவளி இசை நிகழ்ச்சி, முழுக்க முழுக்க இரசிகர்களை மகிழ்ச்சிப்படுத்தும் – எனவே திரண்டு வாருங்கள் – என மின்னல் பண்பலையினர் கேட்டுக் கொள்கிறார்கள்