Home One Line P1 சை.பீர் முகம்மதுவுக்கு வல்லினம் விருது

சை.பீர் முகம்மதுவுக்கு வல்லினம் விருது

2135
0
SHARE
Ad

கோலாலம்பூர் – மலேசியத் தமிழ் இலக்கியப் படைப்புலகில் தீவிரமாக இயங்கி வரும் வல்லினம் சிறந்த இலக்கியப் படைப்பாளர்களுக்கு ‘வல்லினம் விருது’ வழங்கி பெருமைப்படுத்துகிறது. இந்த விருது 2014-இல் தொடங்கப்பட்டது.

மலேசிய படைப்புலகில் தீவிரமாகப் பங்களித்த ஒருவரைத் தேர்ந்தெடுத்து ஐயாயிரம் ரிங்கிட் விருது தொகையாக வழங்கப்படுகிறது. அவ்வகையில் ஐந்து ஆண்டுகள் கழித்து இம்முறை சை.பீர்முகம்மது அவர்களுக்கு 2019-க்கான வல்லினம் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

தன் வாழ்நாள் முழுவதும் மலேசிய இலக்கியத்திற்கு உழைத்த ஒருவரை கவனப்படுத்தும் விருதாகவே வல்லினம் இலக்கியக் குழு இவ்விருதை வடிவமைத்துள்ளது. இவ்விருதை ஒட்டி சை.பீர்முகம்மது அவர்களின் ‘அக்கினி வளையங்கள்’ நாவலும் பதிப்பிக்கப்படுகிறது. விருது வழங்கும் நிகழ்ச்சி கூலிமில் அமைந்துள்ள பிரம்ம வித்யாரண்ய ஆசிரமத்தில் 22.12.2019 (ஞாயிறு) அன்று காலை 10.30க்கு நடைபெறும். இதில் தமிழக எழுத்தாளர்கள் ஜெயமோகன், சு.வேணுகோபால், சுவாமி பிரம்மானந்த சரஸ்வதி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொள்வர்.

#TamilSchoolmychoice

பீர் முகம்மதுவுக்கு இந்த விருது வழங்கப்படுவதை முன்னிட்டு நவம்பர் மாத வல்லினம் ‘சை.பீர்முகம்மது சிறப்பிதழாக’ தயாராகும். எழுத்தாளர்கள் அவரது புனைவுலகம் குறித்த உங்கள் படைப்புகளை வல்லினத்துக்கு அனுப்பலாம்.