இதுவரையிலும் பெரும்பாலும் எதார்த்த திரைப்படங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து வந்த நடிகர் விஜய் சேதுபதி முதன் முறையாக அதிரடி கதாநாயகன் போல் வலம் வர உள்ளார்.
இயக்குனர் விஜய் சந்தர் இயக்கத்தில் விஜய் சேதுபதி, ராஷி கண்ணா, நிவேதா பெத்துராஜ் ஆகியோர் பலர் நடிப்பில் இப்படம் உருவாகி உள்ளது. இப்படத்தில் இடம்பெற்றுள்ள எல்லா பாடல்களும் இரசிகர்களின் கவனத்தை ஈர்த்து பெரும்பாலான நிகழ்ச்சிகளில் ஒலியேற்றப்படுவது குறிப்பிடத்தக்கது. இப்படத்திற்கு விவேக்-மெர்வின் இசையமைத்துள்ளனர்.
சங்கத்தமிழன் படத்தின் முன்னோட்டக் காணொளி வெளியாகி சமூக வலைதளங்களில் பரவலாகப் பகிரப்பட்டு வருகிறது. கீழே கொடுக்கப்பட்டுள்ளது இணைப்பில் இப்படத்தின் முன்னோட்டக் காணொளியைக் காணலாம்: