கூச்சிங்: சரவாக்கில் புகை மூட்டம் காரணமாக ஆஸ்துமா, விழிவெண்படல அழற்சி மற்றும் சுவாசக்குழாய் தொற்று நோய்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
நேற்று வெள்ளிக்கிழமை சுகாதார அமைச்சு வெளியிட்ட ஓர் அறிக்கையில், மாநிலத்தின் 15 புகை மூட்ட கண்காணிப்பு வசதிகளிலிருந்து கிடைக்கப்பெற்ற தரவுப்படி, கடந்த ஜூன் 30 முதல் செப்டம்பர் 7 வரை சராசரியாக 258-ஆக இருந்த ஆஸ்துமா நோயாளிகளின் எண்ணிக்கை , செப்டம்பர் 8 முதல் 14 வரை 307-ஆக அதிகரித்துள்ளது என்று அது குறிப்பிட்டுள்ளது.
குழந்தைகள், வயதானவர்கள், புகை புகைப்பவர்கள் மற்றும் ஆஸ்துமா, மூச்சுக்குழாய் அழற்சி, நிமோனியா, இதய நோய் மற்றும் ஒவ்வாமை போன்ற நோய்களால் பாதிக்கப்படுபவர்கள், அபாயகரமான விளைவுகளை குறைக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு சரவாக் சுகாதாரத் துறை பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.