Home One Line P2 ஹூஸ்டனில் ஒரே மேடையில் மோடி – டிரம்ப்

ஹூஸ்டனில் ஒரே மேடையில் மோடி – டிரம்ப்

828
0
SHARE
Ad

ஹூஸ்டன் (அமெரிக்கா) – டெக்சாஸின் ஹூஸ்டனில் நடந்த மெகாஹவுடி, மோடிநிகழ்ச்சியில் அமெரிக்கா மற்றும் இந்திய நாட்டின் இரு தலைவர்களின் உரைகளிலும் ஆதிக்கம் செலுத்திய முக்கிய தலைப்புகளாக பயங்கரவாதம், அமெரிக்காவின் பாதுகாப்பு எல்லைகள் மற்றும் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் இடையேயான நட்பு முக்கிய அங்கங்களாக இடம்பெற்றது.

டொனால்டு டிரம்புடன் ஹூஸ்டனில் நடந்தஹவுடி, மோடிநிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி நேற்று ஞாயிற்றுக்கிழமை அமெரிக்க இந்தியர்களின் முன்னிலையில் உரையாற்றினார். முதல் முறையாக டிரம்பும், மோடியும் ஒன்றாக ஒரே மேடையை பகிர்ந்து கொண்டு, 50,000 அமெரிக்க இந்தியர்களை சந்தித்தது சாதனையைப் படைத்துள்ளது.

இந்நிகழ்ச்சியில் உரையாற்றிய இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க அதிபரைப் பாராட்டினார். அவருடன் மேடையில் அவர் இருப்பது இரு நாடுகளும் பகிர்ந்து கொள்ளும் நெருக்கமான மற்றும் வலுவான கூட்டாண்மைக்கு சான்றாகும் என்று அவர் குறிப்பிட்டார்.

#TamilSchoolmychoice

நான் அவரை (டொனால்டு டிரம்பை) இன்னும் சிலவற்றிற்காக பாராட்டுகிறேன். அவரது தலைமை உணர்வு, அமெரிக்கா மீதான ஆர்வம், ஒவ்வொரு அமெரிக்கர் மீதும் கொண்டுள்ள அக்கறை, அமெரிக்காவின் எதிர்காலம் குறித்த நம்பிக்கை மற்றும் அமெரிக்காவை மீண்டும் சிறப்பானதாக மாற்றுவதற்கான வலுவான தீர்மானம் போன்றவை என்னை கவர்ந்துள்ளது. அமெரிக்க பொருளாதாரம் மீண்டும் வலுப்பெற்றுள்ளது. அவர் அமெரிக்காவிற்கும் உலகத்துக்கும் நிறைய சாதித்துள்ளார்என்று பிரதமர் மோடி கூறினார்.

2020-ஆம் ஆண்டு அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் டொனால்டு டிரம்ப் மீண்டும் தேர்ந்தெடுக்கப்படும் வகையில், தமது ஆதரவை மோடி வழங்கினார்.

இந்திய புலம்பெயர்ந்தோரின் முன்னிலையில் உரையாற்றும் போது, ​​டொனால்டு டிரம்ப் உலகின் இரண்டு பெரிய ஜனநாயக நாடுகளிடையே பகிரப்பட்ட மதிப்புகளைப் பற்றி பேசினார். மேலும், தொழில்நுட்ப உலகில் புரட்சியை ஏற்படுத்தியதற்காக இந்தியஅமெரிக்க சமூகத்தை பாராட்டினார்.

தீவிர இஸ்லாமிய பயங்கரவாதத்திலிருந்து அப்பாவி பொதுமக்களைப் பாதுகாக்க இரு நாடுகளும் உறுதிபூண்டுள்ளன என்று டிரம்ப் கோடிட்டுக் காட்டினார். தங்களது உரைக்குப் பிறகு, இரு தலைவர்களும் கைகளை இறுகப் பற்றிக் கொண்டு ஒன்றாக நடந்து, ஆரவாரம் செய்த கூட்டத்திற்கு, கைகளை அசைத்தனர்.