Home One Line P1 19 பொது பல்கலைக்கழகங்களில் 38 கல்விப் பாடங்கள் கைவிடப்பட்டன!

19 பொது பல்கலைக்கழகங்களில் 38 கல்விப் பாடங்கள் கைவிடப்பட்டன!

764
0
SHARE
Ad

கோலாலம்பூர்: தற்போதைய உலக முன்னேற்றங்கள் மற்றும் தேவைகளுக்கு இனி பொருந்தாத, பொது பல்கலைக்கழகங்களின் 38 கல்விப் பாடங்களை கல்வி அமைச்சு கைவிட்டுள்ளது.

தற்போதைய தேவைகள் மற்றும் முன்னேற்றங்களைக் கருத்தில் கொண்டு அப்பாடங்களை அமைச்சு அடையாளம் கண்டுள்ளது என்று உயர்கல்வி இயக்குநர் சித்தி ஹாமிசா தப்சீர் தெரிவித்தார்.

ஒவ்வொரு பொது பல்கலைக்கழகங்களும் வழங்கும் ஒவ்வொரு கல்விப் படிப்பும் தற்போதைய முன்னேற்றங்கள் மற்றும் பட்டப்படிப்புக்குப் பிறகு வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தித் தருபவையாக இருக்கிறதா என்பதை உயர் கல்வித் துறை உறுதிப்படுத்த வேண்டும்என்று அவர் மேற்கோள் காட்டினார்.

#TamilSchoolmychoice

வளர்ந்து வரும் நான்காம் தொழில்துறை புரட்சியை நாடு சமாளிக்க வேண்டும், எனவே கல்வித் திட்டங்கள் தொழில்துறை தேவைகளுக்கு ஏற்ப புதிய திட்டங்களுடன் மாற்றப்பட வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார்.

ஒவ்வொரு பல்கலைக்கழகத்தையும் தொழிற்துறை முன்னேற்றங்களுடன் வேகத்தைக் கண்டறியவும், கல்வித் திட்டத்தை அடையாளம் காணவும், பின்னர் மறுவடிவமைக்கவும் கேட்டுக் கொண்டதாக சித்தி ஹமிசா கூறினார். 19 பொது பல்கலைக்கழகங்களில் 38 கல்விப் பாடங்கள் கைவிடப்பட்டுள்ளன.